ரவிசுப்பிரமணியன்

தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

ரவிசுப்பிரமணியன்
Remove ads

ரவிசுப்பிரமணியன் (Ravisubramaniyan) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளரும், கவிஞரும், ஆவணப்பட இயக்குனருமாவார். நாற்பதாண்டுகளாக கவிதைகள் எழுதிவருகிறார்.[1] சிறந்த படைப்பாளுமைகளை ஆவணப்படங்களில் பதிவுசெய்பவராக, இசைஞராக அறியப்படுகிறார். சங்கப்பாடல்கள் முதற்கொண்டு இன்றைய புதுக்கவிதைகள் வரை மெட்டமைத்து, பாடி, மேடையேற்றியும் வருகிறார்.

Thumb

பன்முகம்

கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் முதுகலைப் பொருளியல் (1983-85) பயின்றவர். கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள்,[2] ஆவணப்படங்கள் என்ற நிலையில் இவரது பங்களிப்புகள் உள்ளன. சிறுகதைகளும் எழுதிவருகிறார். பாவலர் இலக்கிய விருது, சாரல் இலக்கிய விருது, அகல் இலக்கிய விருது, சென்னை இலக்கியத் திருவிழா விருது போன்ற விருதுகள் வழங்கும் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். பல தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளுக்கு இசையமைத்துள்ளார். 80க்கு மேற்பட்ட நவீனக் கவிதைகளுக்கு இசை வடிவம் தந்துள்ளார். சாகித்திய அகாதமி ஆலோசனைக்குழுவில் உறுப்பினராக (2003-2007) இருந்துள்ளார். இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. லெனினிடம் ஐந்து ஆண்டுகள் உதவி இயக்குனராகவும், விஜய் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி இயக்குனராகவும், முதுநிலை செய்தி உதவி ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார். ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக கலை, இலக்கியப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். 65 ஆவது தேசிய திரைப்பட விழாவின் விருதுக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.[3] தற்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு இலக்கிய ஆளுமையாக உள்ளார்.

Remove ads

நூல்கள்

  • ஒப்பனை முகங்கள் (கவிதைத்தொகுப்பு), அன்னம் பதிப்பகம், சிவகங்கை, 1990
  • காத்திருப்பு (கவிதைத்தொகுப்பு), அன்னம் பதிப்பகம், சிவகங்கை, 1995
  • வண்ணதாசன் கடிதங்கள் (கல்யாண்ஜியின் கடிதங்கள் தொகுப்பு), நஞ்சப்பன் வெளியீடு, கோவை, 1997
  • காலாதீத இடைவெளியில் (கவிதைத் தொகுப்பு), மதிநிலையம், சென்னை, 2000
  • சீம்பாலில் அருந்திய நஞ்சு (கவிதைத் தொகுப்பு), சந்தியா பதிப்பகம், சென்னை, 2006
  • ஆளுமைகள் தருணங்கள் (கட்டுரைத் தொகுப்பு), காலச்சுவடு, நாகர்கோயில், 2014 [4]
  • விதானத்துச் சித்திரம் (கவிதைத்தொகுப்பு), போதிவனம் பதிப்பகம், சென்னை, 2017 [5][6][7]
  • That was a different season, (Selected poetry of Ravisubramaniyan, English Translation R.Rajagopalan), Authors Press, (ரவிசுப்பிரமணியனின் 51 தமிழ்க்கவிதைகளின் நூல் வடிவம். மொழியாக்கம் ஆர்.ராஜகோபாலன்) [8]
  • நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்[9] (கவிதைத் தொகுப்பு)
Remove ads

ஆவணப்படங்கள்

தொலைக்காட்சி நிறுவனங்களுக்காக 100க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியவர். இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன், ஜெயகாந்தன், தி. ந. இராமச்சந்திரன், திருலோக சீதாராம் போன்றோர் குறித்த ஆவணப்படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

  • இந்திரா பார்த்தசாரதி - “இந்திரா பார்த்தசாரதி எனும் நவீன நாடகக் கலைஞன்“ [10][11]
  • “மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்“ [12]
  • “எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்-ஜெயகாந்தன்“ [13]
  • “சைவத் தமிழ் வளர்க்கும் சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன்“ [14]
  • “திருலோகம் என்றொரு கவி ஆளுமை“ [15][16][17][18][19]
  • பாலசந்தரைப் பற்றிய ஆவணப்படத்தை சூலை 9ஆம் நாளான அவரது 90ஆம் பிறந்த நாளில் தயாரித்து வெளியிட, கவிதாலயா நிறுவனம் இவரைத் தெரிவு செய்துள்ளது. தற்போது இந்த ஆவணப்பட உருவாக்க முயற்சியில் உள்ளார்.[20]
  • “தாமரை“ [21][22][23]

கட்டுரைகள்

சிறுகதைகள்

  • அதுவும் தாத்தா சொன்னதுதான் (கல்கி)
  • உப்பிலியும் உருத்திரங்கண்ணனாரும் (வடக்கு வாசல், இலக்கிய இதழ், புதுதில்லி)

மெட்டு அமைத்த கவிதைகள்

மெட்டு அமைத்த சங்க இலக்கியப்பாடல்கள்

குறுந்தொகையில் உள்ள பிரிவுத்துயரைக் கூறுகின்ற கீழ்க்கண்ட மூன்று பாடல்களுக்கு மெட்டு அமைத்துள்ளார். திவாகர் சுப்பிரமணியம் பின்னணி இசை அமைக்க அனுக்கிரகா ஸ்ரீதர் பாடியுள்ளார்.[24]

  • ‘காதலர் உழையர்ஆகப் பெரிது’ [25]
  • ‘அருளும் அன்பும் நீங்கி’,[26]
  • ‘முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்’ [27]

விருதுகள்

  • சிறந்த நூல் (கவிதை) விருது, (தமிழ்நாடு அரசு, 1991)
  • இலக்கிய விருது (திருப்பூர் தமிழ்ச்சங்கம், 1996)
  • ஆவணப்படத்திற்கான விருது (நியூஜெர்சி தமிழ்ச்சங்கம், 2004)
  • சிற்பி இலக்கிய விருது (2015)[28]
  • தி.க.சி.இயற்றமிழ் விருது (2017)[29]
  • மா. அரங்கநாதன் இலக்கிய விருது (2018) [30][31][32]
  • தஞ்சை பிரகாஷ் கவிதை விருது (2019)
  • ஆனந்தாஸ் எம்.பி. ராதாகிருஷ்ணன் கலை இலக்கிய விருது (2019)[33]
  • வருகை தரு இலக்கிய ஆளுமை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (2020) [34]
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads