ராணக்பூர் சமணர் கோயில்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராணக்பூர் சமணர் கோயில்கள், இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத்தொடரில், பாலி மாவட்டத்தில் உள்ள ராணக்பூர் கிராமத்தில், சமணத் தீர்த்தங்கரர்களில் முதல்வரான ஆதிநாதர் எனும் ரிசபநாதர் மற்றும் 7வது தீர்த்தங்கரரான சுபர்சுவநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அழகிய சிற்பங்களைக் கொண்ட கோயில்களாகும்.[1]
இக்கோயில் உதய்பூர் நகரத்திலிருந்து 95 கி.மீ. தொலைவிலும்; ஜெய்ப்பூரிலிருந்து 370 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
இக்கோயில் மேவார் மன்னரான ராண கும்பாவின் உதவியுடன் ரணக்பூரின் சமண வணிகரான தர்னாஷா என்பவர் பொ.ஊ. 15ம் நூற்றாண்டில் கட்டினார்.[2][3][4] இது மூன்று கோயில்களின் தொகுப்பாகும்.
சமணர்களின் ஐந்து முக்கிய யாத்திரைத் தலங்களில் ராணக்ப்பூர் சமணர் கோயில்களும் ஒன்றாகும்
Remove ads
கட்டிடக்கலை
ராணக்பூர் சமணர் கோயில் இளம் நிறத்தில் 60 x 62 மீட்டர் என்ற அளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் அழகிய குவிமாடங்கள், விமானங்கள், சிறுகோபுரங்கள் மற்றும் விதானங்கள் ரணக்பூரின் மலைச்சரிவில் அழகானகாட்சியளிக்கிறது. சிற்பங்களுடன்கூடிய இக்கோயிலை 1444 பளிங்குத் தூண்கள் தாங்கி நிற்கிறது. இது மூன்று கோயில்கள் கொண்ட கட்டிடத் தொகுதியாகும்.
இத்தூண்களில் உள்ள சிலைகள் ஒன்றை ஒன்று பார்க்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லால் செதுக்கப்பட்ட 108 தலைகளுடனும், வால்களுடன் கூடிய பாம்புச் சிற்பம் மிகவும் அழகான ஒன்றாகும். 6 அடி உயரம் கொண்ட கோயில் மூலவரான ஆதிநாதர் எனும் பார்சுவநாதரின் சிலை வெள்ளை பளிங்குக் கல்லால் ஆனது.[5] இக்கோயில் வளாகத்தில், பார்சுவநாதர் கோயிலுக்கு அருகில் 22வது தீர்த்தங்கரரான நேமிநாதருக்கும், சூரிய பகவானுக்கும் தனித்தனி கோயில்கள் கட்டப்பட்டுள்ளது.
இக்கோயில் கட்டிட அமைப்பு, நான்முக வடிவில் கட்டப்பட்டுள்ளது.[1] இராஸ்தானின் பண்டைய மிர்பூர் சமணர் கோயிலை அடிப்படையாகக்கொண்டு, இக்கோயில் நிறுவப்பட்டுள்ளது.
இக்கோயில் வளாகத்தில் பொ.ஊ. 13ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்த சூரியக் கோயில் சிதிலமடைந்த பின்னர் மீண்டும் பொ.ஊ. 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் 7வது தீர்த்தங்கரரான சுபர்சுவநாதருக்கு அர்பணிக்கப்பட்டதாகும்.[6] இக்கோயில் அழகிய சிற்பங்களுக்கும், கட்டிடக் கலைக்கும் பெயர் பெற்றது.

இக்கோயில்கள் ஆனந்த கல்யான் அறக்கட்டாளையால் நிர்வகிக்கப்படுகிறது.[7]
Remove ads
படக்காட்சியகம்
- ராணக்பூர் சமணர் கோயில்கள்
- ஆயிரம் தலை நாகங்களுடன் கூடிய பார்சுவநாதரின் சிற்பம்
- ரிசபநாதர், கோயில் மூலவர்
- அழகிய சிறுசிறு சிற்பங்களுடன் கூடிய கோயிலின் மேற்கூரை
- பஞ்ச பூதங்களை நினைவுப்படுத்தும் மனிதனின் சிற்பம்
- சிற்பங்களுடன் கூடிய தூண்கள்
- பளிங்குக் கல் கோயில்
- ஜம்பு தீவை சித்தரிக்கும் சிற்பம்
- சத்ருஞ்ஜெய மலையில் உள்ள 863 சமணக் கோயில்களை சித்தரிக்கும் சிற்பம்
- சுபர்சுவநாதர் கோயில், ராணக்பூர், பாலி மாவட்டம்
Remove ads
கோயிலின் காணொளிகள்
இதனையும் காண்க
- சத்ருஞ்ஜெய மலை
- தில்வாரா சமணர் கோயில்
- தரங்கா சமணர் கோயில்கள்
- கிர்நார் சமணர் கோயில்கள்
- சிதறால் மலைக் கோவில்
- மேல் சித்தாமூர் சமணர் கோயில்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads