ராமகுண்டம்

From Wikipedia, the free encyclopedia

ராமகுண்டம்map
Remove ads

ராமகுண்டம் (Ramagundam, தெலுங்கு: రామగుండం) இந்திய மாநிலம் ஆந்திரப் பிரதேசத்தில் கரீம்நகர் மாவட்டத்திலுள்ள ஓர் மாநகராட்சியாகும்.[3]கோதாவரி ஆற்றங்கரையில் மாநிலத் தலைநகர் ஐதராபாத்தின் வடகிழக்கே 250 கிலோமீட்டர்கள் (155 mi) தொலைவில் அமைந்துள்ள ராமகுண்டம் ஆற்றல் நகரம் என அறியப்படுகிறது. இதன் மக்கள்தொகை 473,796 ஆகும். தெலுங்கானா பகுதியில் ஐதராபாத் மற்றும் வாரங்கல்லை அடுத்து மூன்றாவது பெரிய நகரமாக விளங்குகிறது. மக்கள்தொகையில் நாட்டில் 92வதாக [4] உள்ளது.

விரைவான உண்மைகள்

ராமகுண்டம் என்பது ராம+குண்டம் என இரு சொற்களால் ஆனது:நகரின் பழைமையானப் பகுதியில் புகழ்பெற்ற இராமர் கோவில் ஒன்று உள்ளது;குண்டம் என்பது நீருற்று எனப் பொருள்படும்.

Remove ads

புவியியல் அமைப்பு

ராமகுண்டத்தின் அமைவிடம்: 18.8000°N 79.4500°E / 18.8000; 79.4500.[5] இதன் உயரம் கடல்மட்டத்திலிருந்து சராசரியாக 179 மீட்டர்கள் (590 அடி).

தொழில்கள்

ராமகுண்டம் கோதாவரி பள்ளத்தாக்கு நிலக்கரி பகுதியில் அமைந்துள்ளதால் இந்த நிலக்கரி கொண்டு இயங்கும் என்டிபிசியின் அனல்மின் நிலையம் இங்கு முதன்மையாக விளங்குகிறது. இது இந்தியாவில் உள்ள அனல்மின் நிலையங்களிலேயே மிகப் பெரியதாகும். இங்கு அமைந்துள்ள பிற நிறுவனங்கள் இந்திய உரக் கழகம், கேசோராம் சிமென்ட் ஆகியனவாகும்.கோதாவரிக்கனியில் 25 கி.மீ. நீளத்திற்கு 24 நிலக்கரிச் சுரங்கங்கள் இயங்குகின்றன.

தேசிய அனல்மின் கழகத்தின் ராமகுண்டம் சூப்பர் அனல்மின் நிலையம் (RSTPS) 2600 மெகாவாட் மின்னாற்றலை 24/7 நேரமும் உற்பத்தி செய்கிறது. மேலும் 1000MW (2x500MW) உற்பத்திக்கு திட்டமிடப்பட்டுள்ளது. தவிர சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றி 25MWe உற்பத்தி செய்யவும் திட்டம் வடிக்கப்பட்டுள்ளது.

Remove ads

மக்கள்தொகையியல்

2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ராமகுண்டத்தின் மக்கள்தொகை 550,540 ஆகும். இதில் ஆடவர்கள் 51% ஆகவும் பெண்கள் 49% ஆகவும் உள்ளனர். ராமகுண்டத்தின் சராசரி படிப்பறிவு 64% ஆகும். இது தேசிய சராசரி 59.5% விட கூடுதலாகும். ஆண்களில் 72% பேரும் பெண்களில் 56% பேரும் படிப்பறிவு பெற்றவர்களாக உள்ளனர். ஆறு அகவைக்கும் குறைவானவர்கள் மக்கள்தொகையில் 10%ஆக இருந்தது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads