ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்

2021இல் வெளியான தமிழ் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்
Remove ads

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (Raame Aandalum Raavane Aandalum) என்பது 2021ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி நாடகத் திரைப்படம் ஆகும். இயக்குநர் அரிசில் மூர்த்தி தனது அறிமுக இயக்கத்தில் இயக்கியிருந்த இப்படத்தை சூர்யா, ஜோதிகா ஆகியோரின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில், ரம்யா பாண்டியன், வாணி போஜன், புதுமுகம் மிதுன் மாணிக்கம் ஆகியோர் நடித்துள்ளனர். படத்துக்கு கிரிஷ் இசையமைத்துள்ளார். எம்.சுகுமார் ஒளிப்பதிவையும், சிவன் சரவணன் படத் தொகுப்பையும் மேற்கொண்டனர்.

விரைவான உண்மைகள் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், இயக்கம் ...

இந்தத் திரைப்படம் 24 செப்டம்பர் 2021 அன்று டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளமான அமேசான் பிரைம் வீடியோ வெளியானது.[1]

Remove ads

நடிகர்கள்

தயாரிப்பு

சனவரி 2021 இல், சூர்யாவின் 2 2டி என்டேர்டைன்மென்ட் பதாகையின்கீழ் தயாரிக்கப்படும் பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.[2] இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்குவதாகவும் கூறப்பட்டது.[3][4] அவர் "கதைக்களம் மனதுக்கு நெருக்கமானது" என்பதை வெளிப்படுத்தினார். மேலும் இது "மனித உணர்ச்சிகளைக் கையாளும் தாக்கமான அரசியல் நையாண்டி" என்றும் கூறினார்.[4] 1 பிப்ரவரி 2021இல் படபிடிப்பு தொடங்கியது. மேலும் வாணி போஜன், புதுமுகம் மிதுன் மாணிக்கத்துடன் இணைந்து படத்தில் ஒருவராக இணைந்தார்.[5] திருநெல்வேலி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து 50 நாட்களில் முடிவடைந்தது.[6]

படத்தின் ஒலிப்பதிவை பின்னணிப் பாடகர் கிரிஷ் மேற்கொண்டுள்ளார்.[7] படத்தின் ஒலிப்பதிவு யுகபாரதி, விவேக், செந்தில் தாஸ், வீ. மதன்குமார் ஆகியோர் எழுதிய வரிகளுடன் ஐந்து பாடல்களும், இரண்டு கருப்பொருள்கள் பாடல்களும், ஒரு கருவி இசை என எட்டு பாடல்களைக் கொண்டுள்ளது. சோனி மியூசிக் இந்தியா படத்தின் உரிமையைப் பெற்றது. ஒலிச்சுவடு 10 செப்டம்பர் 2021 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது [8]

Remove ads

வெளியீடு

ஆகஸ்ட் 2021 இல், சூர்யா தனது 2டி என்டேர்டைன்மென்ட் தயாரிக்கும் படங்கள் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் உட்பட, நேரடியாக ஸ்ட்ரீமிங் சேவையில் திரையிடப்படும் என்ற நிபந்தனையுடன் அமேசான் பிரைம் வீடியோவுடன் நான்கு பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[9][10] அதில் இது முதல் படமாக இருந்தது.[11] இந்த படம் 24 செப்டம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது [12]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads