இராயக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர் From Wikipedia, the free encyclopedia

இராயக்கோட்டைmap
Remove ads

இராயக்கோட்டை (Rayakottai) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர் ஆகும். [3][4] ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[5] இந்த ஊரில் புகழ்பெற்ற இராயக்கோட்டை தக்காளி சந்தை உள்ளது. இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், கெலமங்கலத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 290 கிலோமீட்டர் தொலைவிலும் தெற்கே மாரண்டஹள்ளி 18கி.மீ தூரத்திலும் உள்ளது. இந்த ஊரில் உள்ள துர்வாச மலையில் இதே பெயரில் அழைக்கப்படும் ஒரு மலைக் கோட்டை உள்ளது.

மக்கள் வகைபாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 2043. வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 8593 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 4311 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 4282 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 66.5 % ஆகும்.[6] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

போக்குவரத்து

இந்த ஊருக்கு சேலம் பெங்களூரு தடத்தில் இராயக்கோட்டை தொடர்வண்டி நிலையம் என்ற பெயரிலான தொடர்வண்டி நிலையம் உள்ளது.

தெருக்கூத்து

இராயக்கோட்டையின் சூளகிரி சாலையில் 1920இல் கட்டப்பட்ட துரோபதியம்மன் கோயில் அருகில். சுமார் 20 ஊர்காரர்கள் சேர்ந்து அக்னி வசந்த மகாபாரத விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் வைகாசிமாதம் தெருக்கூத்தை நடத்துகின்றனர். இங்குக் கூத்து நடக்கிறது. 80 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. தலைசிறந்த கலைஞர்களைக்கொண்டு 18 நாட்கள் பாரதக் கதையை நாள்தோறும் பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை சொற்பொழிவு ஆற்றுவார்கள். அதற்குப் பிறகு இரவு 10 மணிக்குத் தெருக்கூத்து ஆரம்பமாகிவிடும். இந்த 18 நாளும் பாரதக் கதையைச் சுவைபட கூத்தாக நடிப்பார்கள்[7]

Remove ads

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads