ருத்திரபிரயாகை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ருத்திரபிரயாகை (Rudraprayag) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்த்தில் உள்ள ருத்திரப்பிரயாகை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.இது பஞ்ச பிரயாகைகளில் ஒன்றாகும். ருத்திரப்பிரயாகை நகரத்தில் அலக்நந்தா ஆறும், மந்தாகினி ஆறும் ஒன்று கூடுகிறது. இந்நகரத்திலிருந்து 86 கி.மீ. தொலைவில் கேதார்நாத் உள்ளது. இது இமயமலையில் 895 மீட்டர் (2,936 அடி) உயரத்தில் உள்ளது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ருத்திரப்பிரயாகை நகரத்தின் மக்கள் தொகை 9,313 ஆகும். அதில் ஆண்கள் 5,240 மற்றும் பெண்கள் 4,073 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 777 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 93.43% ஆகவுளளது.[1]
சாலைப் போக்குவரத்து
புதுதில்லி-பத்திரிநாத் மற்றும் மணா கணவாயை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 58, ருத்திரபிரயாகை வழியாகச் செல்கிறது.
- அரித்துவார் - ரிஷிகேஷ் - 24 கி.மீ.
- ரிஷிகேஷ்- தேவபிரயாகை - 74 கி.மீ.
- தேவபிரயாகை - சிறீநகர், உத்தரகண்ட் - 34 கி.மீ.
- சிறீநகர், உத்தரகண்ட் - ருத்திரபிரயாகை - 33 கி.மீ.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads