ருத்திரபிரயாகை மாவட்டம்

உத்தரகாண்டத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

ருத்திரபிரயாகை மாவட்டம்
Remove ads

ருத்திரபிரயாகை மாவட்டம் (Rudraprayag district), (Hindi: रुद्र प्रयाग जिला), வடஇந்தியாவின் இமயமலையில் சிவாலிக் மலைத்தொடரில் அமைந்த உத்தராகண்டம் மாநிலத்தின் பதிமூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 2439 சதுர கிலோ மீட்டராகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் ருத்திரபிரயாகை நகராகும்.

விரைவான உண்மைகள் ருத்ரபிரயாக் மாவட்டம் रुद्र प्रयाग जिला, நாடு ...

இம்மாவட்டத்தின் வடக்கில் உத்தரகாசி மாவட்டம், கிழக்கில் சமோலி மாவட்டம், தெற்கில் பௌரி கார்வால் மாவட்டம் மற்றும் மேற்கில் டெக்ரி கார்வால் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

ருத்ரபிரயாக் மாவட்டத்தின் வடக்கில் உலகப் புகழ் பெற்ற கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. மந்தாகினி ஆறு ருத்திரபிரயாகையில் பாய்கிறது.

Remove ads

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ருத்திரபிரயாகை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,42,285 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 114,589 மற்றும் பெண்கள் 127,696 ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 1114 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 122 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 81.30% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 93.90% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.35% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 32,046 ஆக உள்ளது.இம்மாவட்டத்தில் இந்துக்களின் மக்கள்தொகை 99.13 விழுக்காடாக உள்ளது.[1]

Remove ads

அரசியல்

ருத்ரபிரயாக் மாவட்டம் கேதார்நாத் மற்றும் ருத்ரபிரயாகை என இரண்டு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.

வழிபாட்டிடங்கள்

Thumb
கேதார்நாத் கோயில்
விரைவான உண்மைகள் நான்கு சிறு கோயில்கள் ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads