ரெம்பாவ் மாவட்டம்

மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

ரெம்பாவ் மாவட்டம்map
Remove ads

ரெம்பாவ் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Rembau; ஆங்கிலம்: Rembau District; சீனம்: 林茂县) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். ரெம்பாவ் மாவட்டத்தின் முக்கிய நகரம் ரெம்பாவ் (Rembau) நகரம்.

விரைவான உண்மைகள் ரெம்பாவ் மாவட்டம், நாடு ...
Thumb

கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 95 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து 23 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது.

Remove ads

வரலாறு

ரெம்பாவ் மாவட்டம், அடாட் பெர்பாத்தே (Adat Perpatih) எனப்படும் தாய்வழி (Matrilineal) மரபைச் சார்ந்தது. அடாட் பெர்பாத்தே என்பது சுமத்திராவின் மினாங்கபாவு மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு வழக்கமான நடைமுறையாகும்.

ரெம்பாவ் இன்னும் பழைய மினாங்கபாவு முறையில் மாவட்ட ஆட்சியாளரை நியமித்து வருகிறது. அதன் மாவட்டத் தலைவர் பெங்குலு (Penghulu) என்று முன்பு அழைக்கப் பட்டார். இப்போது யாங் தெர் அமாட் மூலியா உண்டாங் லுவாக் ரெம்பாவ் (Yang Teramat Mulia Undang Luak Rembau) என்று அழைக்கப் படுகிறார்.

யாங் டி பெர்துவான் பெசார்

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மன்னர் யாங் டி பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar of Negeri Sembilan). நெகிரி செம்பிலான் அரியணைக்குத் தேர்ந்தெடுக்கப் படுபவர்களில் யாங் தெர் அமாட் மூலியா உண்டாங் லுவாக் ரெம்பாவ் என்பவரும் ஒருவராவார்.

சுங்கை ஊஜோங், செலுபு, சொகோல், தம்பின் ஆகிய மாவட்டங்களின் அரச ஆட்சியாளர்களும் நெகிரி செம்பிலான் அரியணைக்குத் தேர்ந்தெடுக்கப் படும் தகுதி பெறுகின்றனர்.

ரெம்பாவ் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்

ரெம்பாவ் மாவட்டத்தில் 17 முக்கிம்கள் உள்ளன.

  1. பத்து அம்பார் (Batu Hampar)
  2. பொங்கேக் (Bongek)
  3. செம்போங் (Chembong)
  4. செங்காவ் (Chengkau)
  5. காடோங் (Gadong)
  6. குண்டூர் (Kundur)
  7. லெகோங் ஈலீர் (Legong Hilir)
  8. லெகோங் உலு (Legong Hulu)
  9. மிக்கு (Miku)
  10. நேராசாவ் (Nerasau)
  11. பெடாஸ் (Pedas)
  12. பிலின் (Pilin)
  13. செலெமாக் (Selemak)
  14. செமர்போக் (Semerbok)
  15. செப்ரி (Sepri)
  16. தஞ்சோங் கிளிங் (Tanjung Keling)
  17. தித்தியான் பிந்தாங்கோர் (Titian Bintangor)
Remove ads

மலேசிய நாடாளுமன்றம்

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) போர்டிக்சன் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதி. 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.

மேலதிகத் தகவல்கள் நாடாளுமன்றம், தொகுதி ...

நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம்

நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத்தில் ரெம்பாவ் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[1]

மேலதிகத் தகவல்கள் நாடாளுமன்றம், மாநிலம் ...

ரெம்பாவ் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

மலேசியா; நெகிரி செம்பிலான்; ரெம்பாவ் மாவட்டத்தில் (Rembau District) 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 265 மாணவர்கள் பயில்கிறார்கள். 47 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

ரெம்பாவ் மாவட்டத்தில், ஏற்கனவே 5 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. அவற்றுள் புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி, மாணவர் பற்றாக்குறையினால் (7 மாணவர்கள்), 2017 ஜனவரி 3-ஆம் தேதி மூடப்பட்டது.

புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி

இருப்பினும் அந்தப் பள்ளியின் உரிமம் பாதுகாக்கப்பட்டு, ஸ்ரீ செண்டாயான் நகரத்தில், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பள்ளியில், 2017 பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் பயன்படுத்தப் படுகிறது. புதிய பள்ளியை முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் திறந்து வைத்தார்.

புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJK(T) Ladang Bukit Bertam) எனும் பழைய பெயர் பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளி (SJK(T) Bandar Sri Sendayan) என புதிய பெயரில் மாற்றம் செய்யப்பட்டது. இப்போது அந்தப் புதிய பள்ளியில் 192 மாணவர்கள் பயில்கிறார்கள்.

அந்த வகையில் மலேசியாவில் மேலும் ஒரு தமிழ்ப்பள்ளி காப்பாற்றப்பட்டு உள்ளது. மாணவர் பற்றாக் குறையினால் மூடப்படும் சூழலில் உள்ள மலேசியத் தமிழ்ப்பள்ளிகளைக் காப்பாற்றும் போராட்டங்கள் தொடர்கின்றன.

மேலதிகத் தகவல்கள் பள்ளி எண், இடம் ...
Remove ads

காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads