ரொம்பின் மாவட்டம்
மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரொம்பின் மாவட்டம் (ஆங்கிலம்: Rompin District; மலாய்: Daerah Rompin; சீனம்: 云冰县; என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் கோலா ரொம்பின். பகாங் மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது.[3]
இந்த மாவட்டத்தின் வடக்கில் பெக்கான் மாவட்டம்; கிழக்கில் தென்சீனக் கடல்; மேற்கில் பெரா மாவட்டம் மற்றும் ஜெராண்டுட் மாவட்டம்; தெற்கில் பெக்கான் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.
இந்த மாவட்டம் தீபகற்ப மலேசியாவின் தென்கிழக்கு கடற்கரையில், தென் சீனக் கடலை எதிர்கொண்டவாறு உள்ளது. பகாங் மாநிலத் தலைநகரான குவாந்தான் மாநகரில் இருந்து தெற்கே சுமார் 133 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கோலா ரொம்பின். மற்ற முக்கியமான நகரம் பண்டார் முவாட்சாம் ஷா. முக்கிய சுற்றுலா தளம் தியோமான் தீவு.
Remove ads
நிர்வாகப் பிரிவுகள்
ரொம்பின் மாவட்டத்தில் 5 முக்கிம்கள் உள்ளன.
- எண்டாவ் - Endau
- கெராத்தோங் - Keratong
- கோலா ரொம்பின் - Kuala Rompin
- பொந்தியான் - Pontian
- தியோமான் தீவு - Tioman Island
மக்கள்தொகையியல்
பின் விவரங்கள் மலேசிய புள்ளியியல் துறை 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.
Remove ads
பின்னணி
பிரித்தானியர்கள் மலாயாவை ஆட்சி செய்த காலத்தில், கோலா ரொம்பின் ஒரு மீன்பிடி கிராமமாக இருந்தது. பெரும்பாலும் சிங்கப்பூர், குவாந்தான் நகரங்களுக்கு இடையே கடல் வழியாகப் பயணிக்கும் வணிகர்கள் இந்த நகரத்திற்கு வந்து சென்றார்கள்.
1952-ஆம் ஆண்டில் பகாங் மாநில அரசாங்கம், ரொம்பின் பகுதியை பெக்கான் மாவட்டத்தின் கீழ் ஒரு தன்னாட்சித் துணை மாவட்டமாக மாற்றியது.
ரொம்பின் துணை மாவட்டம்
அதற்காக ஓர் உதவி மாவட்ட அதிகாரி பதவியும் உருவாக்கப்பட்டது. ஜே.பி. மெல்போர்ட் (J.B. Melford) என்பவர் அந்தப் பதவிக்கு 1952 டிசம்பர் 16-ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
1976 ஜூலை 31—ஆம் தேதி, அப்போதைய பகாங் சுல்தான் ஹாஜி அகமத் ஷா அல் முஸ்தாயின் (Sultan Haji Ahmad Shah Al Musta'in Billah), ரொம்பின் துணை மாவட்டத்தை ஒரு முழு மாவட்டமாக மாற்றினார்.
அதன் பின்னர், ரொம்பின் துணை மாவட்டம், பெக்கான் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. ரொம்பின் மாவட்டம் பகாங் மாநிலத்தின் ஒன்பதாவது மாவட்டமாக மாறியது.
சுற்றுலா
கோலா ரொம்பின் நகரம், தியோமான் தீவுக்குச் செல்லும் நுழைவாயிலாக அறியப்படுகிறது. கோலா ரொம்பினின் உணவகங்கள் அவற்றின் கடல் உணவுகளுக்கு பிரபலமானவை.
குறிப்பாக ரொம்பின் ஆறு (Sungai Rompin) கரையோரத்தில் பிடிபடும் நன்னீர் இறால் (Freshwater Prawns) மற்றும் நன்னீர் நண்டுகள் (Freshwater Clams); கடல் நண்டுகள் மற்றும் கடல் கணவாய் (Squids) மீன்களுக்குப் பிரபலம்.[4]
போக்குவரத்து

மலேசியக் கூட்டரசு சாலை இந்த மாவட்டத்தில் உள்ள முக்கியச் சாலையாகும். தெற்கு நோக்கி ஜொகூர் பாரு வரை செல்கிறது; வடக்கு நோக்கி முதலில் பகாங் அரச தலைநகரான பெக்கான் நகருக்குச் செல்கிறது. பின்னர் கோலா திராங்கானு மற்றும் கோத்தா பாரு நகரங்களைச் சென்று அடைகிறது.
மலேசியக் கூட்டரசு சாலை இந்த மாவட்டத்தில் மற்றொரு முக்கியமான சாலை. இது கோலா ரொம்பின் அருகே, நெடுஞ்சாலை மலேசியக் கூட்டரசு சாலை
சந்திப்பில் தொடங்கி, புக்கிட் இபாம் நகரில் முடிவு அடைகிறது.
விளக்கம்
விரைவுச்சாலை (ஆங்கிலம்: Expressway; மலாய்: Lebuhraya).
மலேசிய விரைவுச்சாலை (ஆங்கிலம்: Malaysian Expressway; மலாய்: Lebuhraya Malaysia).
நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Highway; மலாய்: Laluan).
மலேசியக் கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route; மலாய்: Laluan Persekutuan Malaysia).
Remove ads
மேற்கோள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads