ரோகிஞ்சா மக்கள்

From Wikipedia, the free encyclopedia

ரோகிஞ்சா மக்கள்
Remove ads

ரோகிஞ்சா மக்கள் (Rohingya people, Ruáingga Bengali: রোহিঙ্গা ரோகிங்கா) என்பவர்கள் மியான்மரில் இராக்கைன் மாநிலத்தின் வடக்கே வசிக்கும் இந்தோ-ஆரிய இனக்குழுவாகும். இவர்கள் ரோகிஞ்சா மொழியைப் பேசுகின்றனர்.[12][13] ரோகிஞ்சா மக்கள் இராக்கைன் மாநிலத்தின் பூர்வகுடிகள் என ரோகிஞ்சா மக்களும், சில ஆய்வாளர்களும் கூறும் அதே வேளையில், இவர்கள் பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் வங்காளத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் எனவும்,[14][15][16] அல்லது குறைந்தது 1948 பர்மிய விடுதலைக்குப் பின்னரும், 1971 வங்கதேச விடுதலைப் போரின் பின்னரும் குடியேறியவர்கள்[17][18] எனவும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...

மியான்மர் நாட்டின் வடக்கே உள்ள ரக்கினே பகுதியில் ரோகிஞ்சா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் மனித உரிமைக்காக அரக்கான் ரோகிஞ்சா இரட்சணிய சேனை என்ற பெயரில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.[19] [20]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads