லாகோர்தியா வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லாகோர்தியா வானூர்தி நிலையம் (LaGuardia Airport, (ஐஏடிஏ: LGA, ஐசிஏஓ: KLGA, எப்ஏஏ LID: LGA) /ləˈɡwɑːrdiə/) ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் குயின்சு பரோவின் வடபகுதியில் அமைந்துள்ள வானூர்தி நிலையமாகும். குயின்சு பரோவின் கிழக்கு எல்ம்ஹர்ஸ்ட்டுப் பகுதியில் பிளஷிங் விரிகுடா மற்றும் பௌவரி விரிகுடா நீர்நிலைகளை அடுத்து அமைந்துள்ளது. அசுடோரியா, ஜாக்சன் ஹைட்சு ஆகிய குயின்சு சுற்றுப்புறங்களும் இதற்கு அண்மையில் உள்ளன.
நியூயார் பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள ஜேஎஃப்கே பன்னாட்டு, லாகோர்தியா, மற்றும் நியூவர்க் லிபர்ட்டி பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் கூட்டாக ஐக்கிய அமெரிக்காவிலேயே மிகப்பெரும் வானூர்திநிலைய அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இவை கூட்டாக பயணிகள் போக்குவரத்தில் உலகில் இரண்டாம் நிலையிலும் வானூர்தி இயக்கங்களில் முதலாவதாகவும் உள்ளன.
2011இல் இந்த வானூர்திநிலையம் 24.1 மில்லியன் பயணிகளும்[2] 2013இல் ஏறத்தாழ 26.7 மில்லியன் பயணிகளும் பயன்படுத்தியுள்ளனர்; இது ஆண்டுக்கு 6.6% வளர்ச்சியாகும்.[3]
இந்த நிலையம் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சேவை அச்சாக விளங்குகிறது.[4] தவிர அமெரிக்கன் எயர்லைன்சிற்கும் அமெரிக்கன் ஈகிள் நிறுவனத்திற்கும் குவிய மையமாக உள்ளது.
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads