லீமா கெடாய்
மலேசியாவில் ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
லீமா கெடாய், (மலாய்: Lima Kedai; ஆங்கிலம்: Lima Kedai; சீனம்: 五间店) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டம், இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறம் ஆகும். மாநிலத் தலைநகர் ஜொகூர் பாருவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1] கெலாங் பாத்தா நகருக்கும் சுகூடாய் நகருக்கும் இடையில் உள்ளது. [2]
இந்த லீமா கெடாய் நகர்ப்பகுதி
இரண்டாவது இணைப்பு விரைவுச்சாலை (Second Link Expressway) பயணிகளுக்கு ஒரு முக்கியமான போக்குவரத்து நகரமாக உள்ளது.
செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தையும் (Senai International Airport); மலேசியா - சிங்கப்பூர் இரண்டாவது பாலத்தையும் (Malaysia–Singapore Second Link) இந்த இரண்டாவது இணைப்பு விரைவுச்சாலை இணைக்கிறது.[3]
Remove ads
வரலாறு
லீமா கெடாய் நகர்ப்பகுதி 1940-ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டது. லீமா கெடாய் என்றால் ஐந்து கடைகள் என்று பொருள்படும். மலாய் மொழியில் லீமா (Lima) என்றால் ஐந்து. கெடாய் (Kedai) என்றால் கடை.[4]
இரண்டாவது உலகப் போர் தொடங்குவதற்கு முன்னர், லீமா கெடாய் பகுதியில் ஒரு கல் சுரங்கம் இருந்தது. அங்கு சுண்ணக்கல் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வந்தன. அந்தச் சுரங்கத்திற்கு அருகில் ஒரு மலை இருந்தது.
மலாயா அவசரகாலம்
அந்த மலையின் மேல் ஓர் பிரித்தானியர் வீடு கட்டி இருந்தார். கீழே இருந்த ஆற்றின் ஓரத்தில் 5 கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டு இருந்தார். அந்த ஐந்து கடைகளில் 4 கடைகள் சீனர்களுக்கும் ஒரு கடை ஒரு சீக்கியருக்கும் வாடகைக்கு விடப்பட்டு இருந்தன. மூன்று மளிகைக் பொருட்கள்; ஒரு காபிக் கடை; ஒரு முடிதிருத்தும் கடை.
இருப்பினும், 1948-ஆம் ஆண்டு மலாயா அவசரகாலத்தின் போது, கடைகளை வாடகைக்கு எடுத்தவர்களும்; சுற்றுப்புறங்களில் வசித்தவர்களும் இயாப் செங் ரப்பர் தோட்டத்திற்கு (Ladang Getah Hiap Seng) மாறிச் செல்லும்படி உத்தரவிடப்பட்டனர். அந்த ரப்பர் தோட்டம் இப்போது கம்போங் பாரு லீமா கெடாய் (Kampung Baru Lima Kedai) என்று அழைக்கப் படுகிறது.[5]
ஜொகூர் மாநில அரசாங்கத்தின் நன்கொடை
தொடக்கத்தில் 42 வீடுகள் இருந்தன. மேலும் பல வீட்டு மனைகள் ஜொகூர் மாநில அரசால் நன்கொடையாக வழங்கப்பட்டன. ஒரு காவல் நிலையமும் கட்டப்பட்டது.
அதற்கு முன்பு இந்த இடம் ரினி தோட்டம் என்று அழைக்கப்பட்டது. 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு முத்தியாரா ரினி என்று அழைக்கப்படுகிறது. இன்றும் இந்த லீமா கெடாய் நகர்ப் பகுதி உள்ளது.
லீமா கெடாய் தமிழ்ப்பள்ளி
1985-ஆம் ஆண்டில், ரினி தோட்டத்தில் ஒரு வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதனால் ரினி தோட்டத்தில் இருந்த தமிழ்ப்பள்ளி, லீமா கெடாய் (Lima Kedai) எனும் இந்த இடத்திற்கு மாற்றப்பட்டது. 1996-ஆம் ஆண்டு வரை ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி இந்த லீமா கெடாய் புறநகரில் செயல்பட்டது.[6]
புதிய மாற்றுப் பள்ளி, இப்போதைய முத்தியாரா ரினி வீட்டு மேம்பாட்டாளரால் கட்டப்பட்டது. 1996-ஆம் ஆண்டில் இருந்து புதிய பள்ளி செயல்பட்டு வருகிறது.[7]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads