லுகான்ஸ்கா மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லுகான்ஸ்கா மாகாணம் (Luhansk Oblast) உக்ரைன் நாட்டின் கிழக்கில் உள்ள தொன்பாஸ் பிரதேத்தில் உருசியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் இலுகன்சுக் நகரம் ஆகும். இம்மாகாணத்தை உருசியா ஆதரவு ஆயுதப் போராளிகளின் கைப்பிடியில் இருந்தது. 2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, லுகான்ஸ்கா மாகாணத்தை உருசியா அரசு மட்டும் இறையான்மை கொண்ட இலுகன்சுக் மக்கள் குடியரசாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும் இதனை தலைநகரமாக சீவிரோடோனெட்ஸ்க் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.[9]
Remove ads
புவியியல்
உக்ரைன் நாட்டின் கிழக்கில் உள்ள தொன்பாஸ் பிராந்தியத்தில் அமைந்த லுகான்ஸ்கா மாகாணம் 26,700 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. லுகான்ஸ்கா மாகாணம் வடக்கிலிருந்து தெற்காக 250 கிலோ மீட்டர் நீளமும்; கிழக்கிலிருந்து மேற்காக 190 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. இம்மாகாணம் உருசியாவுடன் 746 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இம்மாகாணத்தின் வடக்கிலும், கிழக்கிலும் உருசியா நாடும், மேற்கில் கார்கிவ் மாகாணம், தெற்கில் தோனெத்ஸ்க் மாகாணம் எல்லைகளாக கொண்டுள்ளது.
Remove ads
வரலாறு
லுகான்ஸ்கா மாகாணத்தில் 90% மக்கள் உருசிய மொழி பேசுகின்றனர். 1991-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பில், 7016% லுகான்ஸ்கா மாகாண மக்கள், லுகான்ஸ்கா மாகாணம், உருசியாவின் ஆளுமையின் கீழ் இருப்பதை விரும்பினர்.[10] லுகான்ஸ்கா மாகாணத்தின் உருசியர்கள் ஆதரவாளர்கள் நடத்திய உள்நாட்டுப் போருக்குப் பின் 83.86% மக்கள் லுகான்ஸ்கா மாகாணம், தன்னாட்சி கொண்ட குடியரசாக இருப்பதை விரும்பினர்.
8 ஏப்ரல் 2014 அன்று கிரிமியாவை உருசியா ஆக்கிரமிப்பு செய்து உருசியாவுடன் இணைத்துக் கொண்டது. அதே நேரத்தில் தொன்பாஸ் பிரதேசத்தில் உருசியாவில் ஆதரவால், இலுகன்சுக் மக்கள் குடியரசு மற்றும் தனியெத்சுக் மக்கள் குடியரசுகள் தோற்றுவிக்கப்பட்டது.2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, இலுகன்சுக் மக்கள் குடியரசு மற்றும் தனியெத்சுக் மக்கள் குடியரசுகளுக்கு உருசியா அங்கீகாரம் வழங்கியது.
Remove ads
மாகாண ஆட்சிப் பிரிவுகள்
லுகான்ஸ்கா மாகாணம் 18 மாவட்டங்களும், 37 நகரங்களும், 109 நகர்புற குடியிருப்பு பகுதிகளும், 792 கிராமங்களும் கொண்டது.
மக்கள் தொகை பரம்பல்
லுகான்ஸ்கா மாகாணத்தில் உருசிய மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 39.1%, உக்குரேனிய மொழி பேசுபவர்கள் 58% உள்ளனர். 2001-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 68.8% மக்கள் தங்களை உருசியர்கள் என்றும், 30% மக்கள் தம்மை உக்ரைனியர்கள் என பதிவு செய்துள்ளனர்.
பொருளாதாரம்
இம்மாகாணத்தில் நிலக்கரி சுரங்கங்கள், கனரக இயந்திரங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள், உலோகத் தொழிற்சாலைகள், வேதியல், பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெள் இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads