லெகியான்
இந்தோனேசியா, பாலி, பாடுங் பிராந்தியம், கூத்தா மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
லெகியான் (ஆங்கிலம்: Legian; இந்தோனேசியம்: Legian, Kuta, Badung) என்பது இந்தோனேசியா, பாலி, பாடுங் பிராந்தியம், கூத்தா மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை புறநகர்ப் பகுதி ஆகும்.[1] பாலியின் மேற்கு கடற்கரையில் கூத்தா நகரத்திற்கு வடக்கேயும்; செமினியாக் நகரத்திற்கு தெற்கேயும் உள்ளது.[2][3]
கூத்தா மாவட்டத்தில் உள்ள அமைந்துள்ள 5 கிராமங்கள்/துணை மாவட்டங்களில் லெகியான் ஒன்றாகும்.
Remove ads
வரலாறு
லெகியான் பகுதி முன்பு காராங் கெமானிசான் என்ற கிராமத்திலிருந்து தொடங்கியது. காராங் என்றால் கிராமம் என்று பொருள். கெமானிசான் என்றால் இனிப்பு என்று பொருள். மானிஸ் என்ற சொல்லிருந்து வந்தது. "லெகி" என்ற சொல்லும் அதே இனிப்பு என்ற சொல்லைக் கொண்டுள்ளது. பின்னர் படிப்படியாக இந்தப் பகுதி லெகியான் என்று அறியப்பட்டது. லெகியான் என்பது நகரம் மட்டும் அல்ல. இது ஒரு துணை மாவட்டமும் ஆகும்.
இந்தத் துணை மாவட்டம் 2002 பாலி குண்டுவெடிப்பு நிகழ்வாலும் பாதிக்கப்பட்டது. இந்தோனேசியாவின் வரலாற்றிலேயே மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதலாக இது கருதப்படுகிறது. மொத்தம் 202 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 164 பேர் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் ஆவர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியர்கள்.[4].

Remove ads
காட்சியகம்
- லெகியான் காட்சிப் படங்கள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads