பாடுங் பிராந்தியம்

இந்தோனேசியா, பாலி தீவில் ஒரு பிராந்தியம் From Wikipedia, the free encyclopedia

பாடுங் பிராந்தியம்
Remove ads

பாடுங் பிராந்தியம் (ஆங்கிலம்: Badung Regency; இந்தோனேசியம்: Kabupaten Badung) என்பது இந்தோனேசியா, பாலி தீவில் ஒரு பிராந்தியம் ஆகும். இந்தப் பிராந்தியத்தின் தலைநகரம் மங்குபுரம் எனும் மங்குபுரா (Mangupura); (Mengwi); இது ஒரு மேட்டு நில நகரமாக உள்ளது. முன்னதாக, பாடுங் பிராந்தியத்தின் தலைநகரம் தென்பசார் நகரில் இருந்தது.[1]

விரைவான உண்மைகள் பாடுங் பிராந்தியம் Badung Regency Kabupaten Badungᬓᬩᬸᬧᬢᬾᬦ᭄ᬩᬤᬸᬂ, நாடு ...

பாலி மாநிலத் தலைநகரான தென்பசார் மேற்கே உள்ள மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தப் பிராந்தியம் 418.52 கிமீ2 நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. 2024-ஆம் ஆண்டின் இறுதியில், பாடுங்கின் மக்கள் தொகை 537,739 ஆக இருந்தது.[2]

அண்மைய பத்தாண்டுகளில் இந்தப் பிராந்தியம், மக்கள்தொகை ஏற்றத்தினால் தாக்கம் பெற்றுள்ளது; மற்றும் சர்பகிதா (Sarbagita) எனப்படும் பெரும் தென்பசார் புறநகர்ப் பகுதிகளில் மிகப்பெரிய பகுதியாக வளர்ந்துள்ளது. இது கூத்தா, லெகியான், செமிஞ்சாயாக், ஜிம்பரான், நுசா டுவா, காங்கு, உலுவத்து, பாடுங் மற்றும் மெங்வி உள்ளிட்ட பாலியின் அதிக மக்கள் தொகை கொண்ட சுற்றுலாப் பகுதிகளை உள்ளடக்கியது.[3]

இந்தப் பிராந்தியத்தின் வடக்குப் பகுதியில் ஒப்பீட்டளவில் மக்கள்தொகை குறைவாக உள்ளது. ஆனால், கடற்கரைக்கு அருகிலும், ஜிம்பரான் முதல் காங்கு வரையிலான தென்பசார் நகரின் மேற்கிலும் அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. நுகுரா ராய் பன்னாட்டு வானூர்தி நிலையம் இந்தப் பிராந்தியத்திற்குள் அமைந்துள்ளது.[3]

இயற்கை அழகு; கலை மற்றும் பண்பாட்டின் தனித்துவம் பெற்ற இந்தப் பிராந்தியம், இந்து மதத்தை ஊக்குவித்து வருகிறது.[4][5][6] மேலும் பல சுற்றுலா தலங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், மதுபான விடுதிகள், பயண நிறுவனங்கள் இந்தப் பிராந்தியத்தில் உள்ளன.[3] சுற்றுலாத் தலங்கள் போன்ற பல்வேறு பன்னாட்டுத் தரத்திலான தங்குமிட வசதிகளால் இந்தப் பிராந்தியத்திற்கு வருமானம் கிடைக்கிறது. பாடுங் பிராந்தியத்தின் வருமானத்திற்கு சுற்றுலாத் துறை முதன்மை இலக்காக இருப்பதால், சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கு கூடுதலான முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.[7]

Remove ads

பொது

பாடுங் பிராந்தியத்தின் தெற்குப் பகுதியின் மக்களில் பெரும்பாலோர் சுற்றுலாத் துறையிலும்; வடக்குப் பகுதியில் உள்ளவர்கள் விவசாயிகளாகவும் தொழில் செய்கிறார்கள். பிராந்தியத்தின் வடக்குப் பகுதியில் வேளாண் துறை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.[7]

ஆனாலும் பாடுங் பிராந்தியத்தின் முதன்மை வருமானம் கூத்தா, கெரோபோகான், நுசா டுவா, தஞ்சோங் பெனோவா மற்றும் ஜிம்பரான் ஆகியவற்றைச் சுற்றியுள்ள சுற்றுலாத் துறையில் இருந்து வருகிறது. இதனால் பாலியில் சுற்றுலாத் துறையிலிருந்து அதிக வருமானம் ஈட்டும் ஒரே பிராந்தியமாக பாடுங் பிராந்தியம் திகழ்கிறது.[7]

Remove ads

நிர்வாக மாவட்டங்கள்

பாடுங் பிராந்தியம் 6 மாவட்டங்களாக (Districts of Indonesia) (Kecamatan) பிரிக்கப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் நிர்வாக குறியீடு, மாவட்டம் (Kecamatan) ...

பாடுங் பிராந்திய வரைபடம்

* பாடுங் பிராந்தியத்தில் உள்ள மாவட்டங்கள்

Thumb
வெள்ளை நிறத்தில் பாடுங் பிராந்தியத்தில் உள்ள மாவட்டங்கள்
Remove ads

காலநிலை

பாடுங் பிராந்தியம் வெப்பமண்டல மழைக்காடு காலநிலை (Af) கொண்டது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மிதமான மழைப்பொழிவும், அக்டோபர் முதல் மார்ச் வரை அதிக மழைப்பொழிவும் இருக்கும்.

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், பாடுங், மாதம் ...
Remove ads

காட்சியகம்

  • பாடுங் பிராந்திய காட்சிப் படங்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads