வங்சாமாஜு எல்ஆர்டி நிலையம்
வங்சாமாஜு இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வங்சாமாஜு எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Wangsa Maju LRT Station; மலாய்: Stesen LRT Wangsa Maju; சீனம்: 旺沙玛珠) என்பது மலேசியா, கோலாலம்பூர், வங்சா மாஜு பகுதியில் கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது.
கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி கோம்பாக் எல்ஆர்டி நிலையம் வரையிலான 12 இலகு விரைவுப் போக்குவரத்து நிலையங்களை உள்ளடக்கிய இரண்டாவது கட்டமைப்புப் பிரிவின் ஒரு பகுதியாக 1 சூன் 1999 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது. இந்த நிலையம் நிலத்தடி வழித்தடத்தின் சேவையில் உள்ளது.
Remove ads
பொது
வங்சாமாஜு எல்ஆர்டி நிலையம், கோம்பாக்கிற்கு வடக்கே உள்ள மூன்றாவது கடைசி நிலையமாகும். இந்த நிலையம் வடக்கு கோலாலம்பூர் புறநகர் பகுதியான வங்சாமாஜுவிற்குள், 1/27A சாலையின் பிரதான சாலையில் அமைந்துள்ளது.
இந்த நிலையம் வங்சா மாஜு பிரிவு 1 மற்றும் வங்சா மாஜு பிரிவு 2 ஆகிய இரண்டு குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது; மற்றும் 1/27A சாலை; 16/27B சாலை ஆகிய சாலைகளின் வழியாகத் தேசா செதாபாக் குடியிருப்பு பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
Remove ads
இணைப்புகள்
- ஜாலான் (Jalan) எனும் சொல் மலேசியாவில் சாலை என்பதைக் குறிப்பிடும் மலாய் வழக்குச் சொல் ஆகும்.
மலேசியத் தமிழர்கள்; சாலை எனும் சொல்லிற்குப் பதிலாக ஜாலான் எனும் சொல்லையே பரவலாகப் பயன்படுத்துகின்றனர்.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads