செரி ரம்பாய் எல்ஆர்டி நிலையம்

செரி ரம்பாய் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

செரி ரம்பாய் எல்ஆர்டி நிலையம்map
Remove ads

செரி ரம்பாய் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Sri Rampai LRT Station; மலாய்: Stesen LRT Sri Rampai; சீனம்: 南北花园) என்பது மலேசியா, கோலாலம்பூர், வங்சா மாஜு பகுதியில் கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் KJ4 செரி ரம்பாய், பொது தகவல்கள் ...

இந்த நிலையம் 24 திசம்பர் 2010 அன்று திறக்கப்பட்டது; மற்றும் அருகில் உள்ள தாமான் செரி ரம்பாய் குடியிருப்பின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. இந்த நிலையம் தாமான் செரி ரம்பாய் மற்றும் வங்சா மாஜு புறநகர்ப் பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது.

Remove ads

பொது

1996-ஆம் ஆண்டில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், 1997-ஆம் ஆண்டில் சுற்றியுள்ள பகுதிகளின் குறைந்த மக்கள் தொகையின் காரணமாகவும்; மற்றும் அருகிலுள்ள வீட்டுத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதாலும் இந்த நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.

அதன் விளைவாக அனைத்து தொடருந்துகளும் இந்த நிலையத்தில் நிற்காமல் கடந்து சென்றதால் ஒரு கட்டத்தில் இந்த நிலையம் ஒரு பேய் நிலையம் என்றும் கூறப்பட்டது. ஆகஸ்டு 25, 2006 அன்று மாலை, நிலையத்தின் தடங்கள் திடீர் வெள்ளத்தால் நீரில் மூழ்கின.

நிலையத்தின் சீரமைப்பு

முழு கிளானா ஜெயா வழித்தடத்தில் பல மணிநேரங்களுக்குச் சேவைகள் தடைபட்டன; மற்றும் கேஎல்சிசி எல்ஆர்டி நிலையத்திற்கும் கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்திற்கும் இடையே பெரும் பயணிகள் நெரிசலையும் ஏற்படுத்தின. எனினும் அன்றிரவு 8 மணிக்கு இடர்பாடுகள் களையப்பட்டன.

செப்டம்பர் 2008-இல் நிலையத்தின் சீரமைப்புப் பணிகள் மீண்டும் தொடங்கின. பின்னர் நிலையத்தின் பணிகள் திசம்பர் 2010 தொடக்கத்தில் நிறைவடைந்தன; மேலும் 24 திசம்பர் 2010 அன்று தன் சேவையைத் தொடங்கியது.

Remove ads

பேருந்து சேவைகள்

மேலதிகத் தகவல்கள் பேருந்து எண், வழி ...

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads