வசந்தி சின்னசாமி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வசந்தி சின்னசாமி (ஆங்கிலம்: Wasanthee Sinnasamy; சீனம்: 瓦桑蒂·辛纳萨米) என்பவர் மலேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதி; மனித உரிமை செயற்பாட்டாளர்; மற்றும் பேராக் மாநில சட்டமன்றத்தின் ஊத்தான் மெலிந்தாங் தொகுதி உறுப்பினரும் ஆவார்.

விரைவான உண்மைகள் மாண்புமிகு புவான்வசந்தி சின்னசாமி YB Wasanthee Sinnasamy பேராக் மாநில சட்டமன்றம், ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் ...

2022-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், 27,694 வாக்காளர்களைக் கொண்ட ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில், 11,924 வாக்குகள் பெற்று, 1,130 வாக்குகள் பெரும்பான்மையில் வசந்தி சின்னசாமி வெற்றி பெற்றார். 70 விழுக்காட்டு சீனர், மலாய் இனத்தவர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் ஒரு தமிழ்ப்பெண் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு சாதனையாக அறியப்படுகிறது.

இவர் பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மக்கள் நீதிக் கட்சியின் (People's Justice Party) (PKR) மகளிர் பிரிவின் தேசியத் துணைத் தலைவர் ஆவார்.[1][2]

Remove ads

பொது

2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட மூன்று இந்தியப் பெண்கள் மிகச் சிறப்பாக வெற்றி பெற்று சாதனைகளைப் படைத்துள்ளனர். அவர்களில் வசந்தி சின்னசாமியும் ஒருவராவார்.[3]

மற்ற இருவர்: புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட துளசி மனோகரன்; மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பவானி வீரையா

ஜொகூர் கூலாய் தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்ற இவர், ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகம், சைபர்ஜெயா; அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்னை; மலாயா பல்கலைக்கழகம், கோலாலம்பூர் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றுள்ளார்.

Remove ads

பொறுப்புகள்

  • நிர்வாகி, சிலாங்கூர் இஜ்ரா அறக்கட்டளை, சா ஆலாம் (2019 - தற்போது வரையில்)[4]
  • இயக்குநர்கள் குழு உறுப்பினர், சிலாங்கூர் பெண்கள் அறவாரியம் (2021- தற்போது வரையில்)[4]
  • அறங்காவலர் குழு உறுப்பினர், தேசிய நல அறக்கட்டளை (2019-2021)[4]
  • இயக்குநர், இந்துஜா நிறுவனம், ரவாங் ஒருங்கிணைந்த தொழில் பூங்கா, ரவாங், சிலாங்கூர் (2014-2019)[4]
  • நிர்வாக உறுப்பினர், கோலா சிலாங்கூர் மாவட்ட நகராட்சி (2013-2014)[4]
  • இயக்குநர், செகல் ஜெயா மழலையர் பள்ளி, சுங்கை பூலோ, சிலாங்கூர் (2007-2012)[4]
Remove ads

ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்




Thumb

2022-இல் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[5][6]

  மலாயர் (50.77%)
  சீனர் (18.77%)
  இதர இனத்தவர் (1.67%)
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads