வசாய்-விரார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வசாய்-விரார் (Vasai-Virar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். 89 வார்டுகளைக் கொண்ட வசாய்-விரார் மாநகராட்சி நைகோன், விரார், நள சோப்ரா மற்றும் வசை பகுதிகளைக் கொண்டது. இது மும்பை பெருநகரப் பகுதியாகும்.

விரைவான உண்மைகள் வசாய்-விரார், நாடு ...
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 89 வார்டுகளையும், 291,229 வீடுகளையும் கொண்ட வசாய்-விரார் நகர மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 12,22,390 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 6,48,172 மற்றும் 5,74,218 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 886 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 147102 - 12.03 % ஆகும். சராசரி எழுத்தறிவு 88.57 % ஆகும். பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே மற்றும் ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 77.16%, இசுலாமியர்கள் 9.03%,கிறித்துவர்கள் 8.28% , சீக்கியர்கள் 0.21%, பௌத்தர்கள் 2.65%, சமணர்கள் 1.90% மற்றும் பிறர் 0.71%ஆக உள்ளனர்.[3]

Remove ads

போக்குவரத்து

வசாய்-விரார் நகரம், மும்பை, நவி மும்பை, தானே, கல்யாண், பிவாண்டி, அகமதாபாத் போன்ற நகரங்களுடன் மேற்கு இரயில்வே மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

தொடருந்து நிலையம்

Thumb
மும்பை மின்சாரப் பயணியர் தொடருந்து

வசாய்-விரார் நகரத்தில் கீழ்கண்ட தொடருந்து நிலையங்கள் உள்ளது.

  • வசாய்-விரார் தொடருந்து நிலையம்
  • நள சோப்ரா தொடருந்து நிலையம்
  • வசாய் ரோடு தொடருந்து நிலையம்
  • நைகோன் தொடருந்து நிலையம்

தட்ப வெப்பம்

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், Vasai-Virar, மாதம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads