இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம் 2020–21
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இங்கிலாந்து துடுப்பாட்ட அணி நான்கு தேர்வுப் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகளில் மற்றும் ஐந்து இருபது20 போட்டிகளில் விளையாடுவதற்காக 2020 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.[1] இந்த சுற்றுப்பயணம் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்டம் [2] மற்றும் 2020-23 உலககிண்ண தகுநிலைப் போட்டிகளின் ஒரு பகுதியாக அமைகிறது.[3]
முதலாவது தேர்வுப் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ஓட்டங்களால் வென்றது.[4] இந்தியா இரண்டாவது தேர்வை 317 ஓட்டங்களால் வென்றது.[5][6] ஒரு பகல்/இரவு ஆட்டமாக இடம்பெற்ற மூன்றாவது தேர்வுப் போட்டி,[7] இரண்டே நாட்களில் முடிவடைந்தது. இப்போட்டியில் இந்தியா 10 இலக்குகளால் வெற்றி பெற்றது.[8] இத் தோல்வி மூலம் இங்கிலாந்து ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்தது.[9] நான்காவது போட்டியை இந்தியா ஒரு இன்னிங்சு, 25 ஓட்டங்களால் வென்று, தொடரை 3–1 என்ற கணக்கில் வென்றது.[10] இத்தொடர் வெற்றியை அடுத்து, இந்தியா 2021 சூன் 18-22 வரை இலண்டன் இலார்ட்சு துடுப்பாட்ட அரங்கில் நடைபெறும் ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதும்.[11]
Remove ads
பின்னணி
முதலில், இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் இருபது20 போட்டிகளில் விளையாட 2020 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.[12] ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பல போட்டித் தொடர் அட்டவணைகள் மாற்றியமைக்கபட்டது குறிப்பாக 2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம், 2020 இந்தியன் பிரீமியர் லீக் மேலும் பல போட்டிகள்.[13]
அணிகள்
Remove ads
தேர்வுத் தொடர்
1-வது தேர்வு
5–9 பெப்ரவரி 2021 ஆட்ட விவரம் |
எ |
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அனில் சவுத்ரி (இந்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் நடுவராக பணியாற்றினார்.[18]
- ஜோ ரூட் (இங்) தனது 100-வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[19]
- ஜோஸ் பட்லர் (இங்) தனது 50-வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[20]
- ஜோ ரூட் (இங்) தேர்வுப் போட்டிகளில் தனது 20-வது சதத்தைப் பெற்று,[21] 100-வது தேர்வுப் போட்டியில் இரட்டைச் சதம் பெற்ற முதலாவது துடுப்பாளர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[22]
- இஷாந்த் ஷர்மா (இந்) தேர்வுப் போட்டிகளில் தனது 300-வது இலக்கைக் கைப்பற்றினார்.[23]
- சாக் லீச் (இங்) தனது 50-வது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[24]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இங்கிலாந்து 30, இந்தியா 0.
2-வது தேர்வு
13–17 பெப்ரவரி 2021 ஆட்டவிபரம் |
எ |
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அக்சார் பட்டேல் (இந்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- வீரேந்தர் சர்மா (இந்) முதல் தடவையாக ந்டுவராகப் பணியாற்றினார்.[25]
- ரவிச்சந்திரன் அசுவின் (இந்) 200 இடது கை மட்டையாளர்களை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் ஆவார்.[26]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இந்தியா 30, இங்கிலாந்து 0.
3-வது தேர்வு
24–28 பெப்ரவரி 2021 ஆட்டவிபரம் |
எ |
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இஷாந்த் ஷர்மா (இந்) தனது 100-வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[27]
- ரவிச்சந்திரன் அசுவின் (இந்) இரண்டாவது விரைவாக தேர்வுப் போட்டிகளில் தனது 400-வது இலக்கைக் (77) போட்டிகளில் கைப்பற்றினார்.[28]
- போடப்பட்ட பந்துகளின் அடிப்படையில் 1935 இற்குப் பின்னர் இதுவே மிக விரைவாக முடிவடைந்த தேர்வுப் போட்டியாகும்.[29]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இந்தியா 30, இங்கிலாந்து 0.
4-வது தேர்வு
4–8 மார்ச் 2021 ஆட்டவிபரம் |
எ |
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இந்தியா 30, இங்கிலாந்து 0.
Remove ads
இ20ப தொடர்
1-வது இ20ப
எ |
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
2-வது இ20ப
எ |
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இசான் கிசான், சூர்யகுமார் யாதவ் (இந்) இருவரும் தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
- விராட் கோலி (இந்) இ20ப போட்டிகளில் 3,000 ஓட்டங்கள் எடுத்த முதல் மட்டையாளர் ஆவார். இ20ப 3,000 ஓட்டங்கள்[30]
3-வது இ20ப
எ |
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இயோன் மோர்கன் 100 இ20ப போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்தின் முதல் வீரர் ஆவார்.[31]
- ஜோனி பேர்ஸ்டோ (இங்) இ20ப போட்டிகளில் 1,000 ஓட்டங்கள் எடுத்தார்.[32]
4-வது இ20ப
எ |
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஜேசன் ராய் (இங்) இ20ப போட்டிகளில் 1,000 ஓட்டங்கள் எடுத்தார்.
5-வது இ20ப
எ |
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- டேவின் ஜொகானஸ் மலான் (இந்) (இங்) இ20ப போட்டிகளில் விரைவாக 1,000 ஓட்டங்கள் எடுத்தார். இ20ப 1,000 ஓட்டங்கள் (24 இன்னிங்சு).[33]
Remove ads
ஒருநாள் தொடர்
1-வது ஒருநாள்
எ |
||
ஜோனி பேர்ஸ்டோ 94 (66) பிரசித் கிருஷ்ணா 4/54 (8.1 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பிரசித் கிருஷ்ணா, குருணால் பாண்டியா (இந்) இருவரும் தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- குருணால் பாண்டியா (இந்) ஒருநாள் அறிமுக போட்டியிலேயே விரைவாக 50 ஓட்டங்களை எடுத்தார். (26 பந்துகள்).[34]
- உலகக்கிண்ணத் தகுநிலைப் போட்டி புள்ளிகள்: இந்தியா 10, இங்கிலாந்து 0.
2-வது ஒருநாள்
எ |
||
கே. எல். ராகுல் 108 (114) ரீசு டொப்லி 2/50 (8 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- லியாம் லிவிங்க்சுடன் (இங்) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- உலகக்கிண்ணத் தகுநிலைப் போட்டி புள்ளிகள்: இங்கிலாந்து 10, இந்தியா 0.
3-வது ஒருநாள்
எ |
||
ரிஷப் பந்த் 78 (62) மார்க் வூட் 3/34 (7 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- உலகக்கிண்ணத் தகுநிலைப் போட்டி புள்ளிகள்: இந்தியா 10, இங்கிலாந்து 0.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads