வல்லம்
தஞ்சாவூர் மாவட்டப் பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
வல்லம் (Vallam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
Remove ads
அமைவிடம்
திருச்சி -- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை எண் 67-இல் அமைந்த வல்லம் பேரூராட்சி, தஞ்சாவூரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
7.6 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 191 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,840 வீடுகளும், 16,758 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
வரலாறு
- சங்ககாலத்தில் வல்லம். வல்லங்கிழவோன் நல்லடி, வல்லத்துப் புறமிளை ஆரியர் படை உடைந்தது.
- சம்பந்தர் பாடிய பாடிய வல்லம் பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம்
- வல்லவரையன் குலத்தவர் வல்லத்தை ஆண்ட குறுநில மன்னர்கள் ஆவார்கள்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10.72°N 79.08°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 75 மீட்டர் (246 அடி) உயரத்தில் இருக்கின்றது.
திடக்கழிவு மேலாண்மை
வல்லத்தில் வீடுகள் மற்றும் தொழிலகங்களில் சேரும் குப்பகைகளை பேரூராட்சி சேகர்த்து இங்கு அமைந்துள்ள “வளம் மீட்பு பூங்காவில்” தரம் பிரித்து உரமாக மாற்றுகின்றது. தஞ்சாவூரில் 22 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வல்லமும் ஒன்றாகும். இதற்காக அரசு ஒவ்வொரு பேரூராட்சிக்கும் 22 முதல் 40 இலட்சம் வரை அரசு வழங்குகிறது. இங்கு குப்பைகள் மட்கும் குப்பைகள் மட்காத குப்பைகள் எனத் தரம்பிரித்து, மட்கும் குப்பைகள் மண்புழு மூலம் உரமாகவும், மட்காத குப்பைகள் மறு சுழற்சிக்கும் அனுப்பப்படுகிறது.[8]


Remove ads
கல்வி நிறுவனங்கள்
வரலாற்று பெருமை நிறைந்த இவ்வூரில் இன்று பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் பிரிஷ்ட் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இங்கு உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகும். மேலும், அடைக்கலமாதா கல்லூரி, சுவாமி விவேகானந்தா கல்லூரி மற்றும் மருது பாண்டியர் கல்லூரி போன்ற கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளும் இங்கு உள்ளன.
வெளி இணைப்புகள்
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads