வாரணாசி நகரத் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வாராணசி நகரத் தொடருந்து நிலையம் (Varanasi City railway station) வாராணசியில் உள்ள தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது வாராணசி சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து வடகிழக்கில் 4 கி.மீ. தொலைவிலும் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் வடகிழக்கில் 10 கி.மீ. தொலைவிலும் லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு விமான நிலையத்தின் தென்கிழக்கே 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வாராணசி சந்திப்பு தொடருந்து நிலையத்தில் பயணிப் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் கூடுதலாக இந்த முனையம் செயல்படுகிறது.

விரைவான உண்மைகள் வாராணசி நகரத் தொடருந்து நிலையம், பொது தகவல்கள் ...
Remove ads

பயணிகள் வசதிகள்

வாராணசி நகரத் தொடருந்து நிலையத்தில், ஐந்து நடைமேடைகள் உள்ளன, கூடுதலாக 8 நடைமேடைகளுக்கான வசதிகள் உள்ளன. நிலையத்திற்கு ஒரு நுழைவாயில் உள்ளது. வாராணசி சந்திப்பில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், மாண்டுவாடி ரயில் நிலையத்தையும், வாராணசி நகர ரயில் நிலையத்தையும் கூடுதல் நிலையங்களாக மேம்படுத்த இரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இப்போது, வாராணசி நகரம் வடகிழக்கு தொடருந்து மண்டலத்தின் (வாராணசி நகரப் பிரிவு) தலைமை நிலையமாகும். முன்னதாக வாராணசி சந்திப்பு வடகிழக்கு ரயில்வேயின் தலைமையகமாக இருந்தது. பின்னர் வடகிழக்கு ரயில்வே இந்த தலைமையகத்தை மாற்றியது. வாராணசி சந்திப்பு வடக்கு தொடருந்து மண்டலத்தின் கீழ் வருவதால், இலக்னோ சார்பாக் கோட்டத்திற்கு உட்பட்டது. இந்த நிலையம் காஜிபூர், மாவ், தர்பங்கா, சாப்ரா, மும்பை, இலக்னோ, கோரக்பூர், கான்பூர் போன்ற நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.[1][2]

Remove ads

வாராணசி நகரத்திலிருந்து புறப்படும் தொடருந்து வண்டிகள்

மேலதிகத் தகவல்கள் ரயில் எண், ரயில் பெயர் ...

பயணிகள் ரயில்கள் வாராணசி நகரத்திலிருந்து

மேலதிகத் தகவல்கள் ரயில் எண், ரயில் பெயர் ...

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads