வாழப்பாடி ராமமூர்த்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாழப்பாடி கே. ராமமூர்த்தி அல்லது வாழப்பாடியார் என்று அழைக்கப்படுபவர். (18 ஜனவரி 1940 - அக்டோபர் 27, 2002) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் ஆறு முறை இந்திய மக்களவை உறுப்பினராகவும் இரு முறை இந்திய நடுவண் அரசில் ஆய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
Remove ads
அரசியல் வாழ்க்கை
- ராமமூர்த்தி 1940 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிறந்தார். 1959இல் திராவிடர் கழகத்தில் இணைந்தார். அடுத்த ஆண்டே அக்கட்சியிலிருந்து விலகி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். 1968ல் சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளரானார். காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான ஐ. என். டி. யூ. சியின் தலைவராகப் பணியாற்றினார். காங்கிரசின் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
- தமிழக காங்கிரஸ் கட்சியின் பெரும் தலைவர்களான ஜி. கே. மூப்பனார் தலைமையிலான "மூப்பனார் கோஷ்டி"க்கும் எதிராக “வாழப்பாடி கோஷ்டி” என்ற ஒன்று இவரது தலைமையில் செயல்பட்டது.
- இவர் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக 1977 நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- அதன் பிறகு 1980, 1984, 1989, 1991 நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார்.
- பின்பு வாழப்பாடி இராமமூர்த்தி அவர்கள் தனது சுயகட்சியான தமிழக ராஜீவ் காங்கிரசு சார்பில் அதிமுக–பாஜக தலைமையிலான தேஜகூட்டணியில் 1998 நாடாளுமன்ற தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று பிரதமர் வாஜ்பாயின் மத்திய அமைச்சரவையில் இந்திய பெட்ரோலியதுறை மந்திரியாக பொறுப்பேற்றார்.
Remove ads
தனிக்கட்சி
- 1991-1996 பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான நடுவண் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
- 1996 நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தலில் அதிமுக–காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து காங்கிரசிலிருந்து விலகி திவாரி காங்கிரசில் இணைந்து அதன் தமிழ்நாட்டுத் தலைவராகப் பணியாற்றினார்.
- 1996 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். இத்தேர்தலில் திவாரி காங்கிரஸ் எத்தொகுதியிலும் வெற்றி பெற வில்லை.
- பின்பு 1998 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக ராஜீவ் காங்கிரசு என்ற கட்சியைத் தொடங்கி அதிமுக-பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்றார்.
- பின்பு ஆட்சி கலைக்கப்பட்டு அடுத்த வருடத்திலேயே 1999 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-பாஜக கூட்டணியில் மீண்டும் சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட போது எதிரணியில் அதிமுகவில் ஜெயலலிதாவால் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்.
- பின்பு 2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக–பாஜக கூட்டணியில் தொடர்ந்த போதும் தேர்தலில் போட்டியிட கேட்ட தொகுதிகள் திமுக தலைவர் மு.கருணாநிதி கொடுக்காததால் வாழப்பாடி ராமமூர்த்தி அவர்கள் அத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
- பிறகு தனது கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். பிறகு 2002ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads