தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999

From Wikipedia, the free encyclopedia

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999
Remove ads

இந்தியக் குடியரசின் பதின்மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1999 ஆம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 26 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

விரைவான உண்மைகள் மக்களவைக்கான 39 இடங்கள், First party ...
Remove ads

பின்புலம்

1999ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. 1998 நாடாளுமன்றத்தேர்தலுக்குப் பின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை ஒரே ஆண்டில் அதிமுக ஆதரவை விலக்கி கொண்டதால் மத்தியில் வாஜ்பாயின் பாஜக அரசு 13 மாதங்களில் கவிழ்ந்தது. இதனால் அதிமுக-பாஜகவின் தேஜகூட்டணியில் இருந்து விலகி கொண்டதால். தமிழகத்தின் அதிமுகவின் எதிர்கட்சியான திமுக தேஜகூவில் இணைந்து கொண்டதால். இந்த பாராளமன்ற தேர்தலில் திமுகவின் ஆதரவுடன் பாஜக மீண்டும் வென்று வாஜ்பாய் பிரதமர் ஆனார். மேலும் மூன்றாண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த திமுக கூட்டணியிலிருந்த தமாகா விலகி கொண்டது. இத்தேர்தலில் மும்முனை போட்டி காணப்பட்டது. திமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிமுக, பாமக, சு. திருநாவுகரசின் எம்ஜியார் அதிமுக, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரசு போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனை எதிர்த்து அதிமுக-காங்கிரஸ் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுள் இடம் பெற்றிருந்தன. இவை தவிர இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்ற முஸ்லிம் கட்சிகளும் அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளித்தன. இவை தவிர தமாகா, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் கூட்டணியும் களத்தில் இருந்தது.

Remove ads

முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் திமுக+, இடங்கள் ...

தமிழக அமைச்சர்கள்

இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:[1]

இலாக்கா அமைச்சர்கள்

மேலதிகத் தகவல்கள் அமைச்சர், கட்சி ...

இணை அமைச்சர்கள்

மேலதிகத் தகவல்கள் அமைச்சர், கட்சி ...

* தனிப் பொறுப்பு (Ministers of State (Independent charge))

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads