விஸ்வநாத் (1996 திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விஸ்வநாத் (Vishwanath) 1996 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 16 ஆம் தேதியன்று சரவணன் மற்றும் சுவாதி நடிப்பில், தேவா இசையில், கே. கௌதம் இயக்கத்தில், பி. வீரமுத்து தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2]
Remove ads
கதைச்சுருக்கம்
விஸ்வநாத் (சரவணன்) சிறையிலிருந்து தப்பிக்கிறான். அவன் புகைப்படத்தை செய்தித்தாள்களில் வெளியிட்டு மாநிலம் முழுவதும் காவல்துறை தேடுகிறது. ஒரு நாள் தன் வீட்டருகே விஸ்வநாத்தை பார்க்கும் சுவாதி (சுவாதி) அவனைக் கண்டு அஞ்சி ஓடுகிறாள். சுவாதி தன் சகோதரி சிந்துவுடன் (சிந்து) தங்கியிருக்கிறாள். சிந்து ஒரு நாள் மயக்கமடைந்து விழ, அவளுக்கு விஸ்வநாத் சிகிச்சையளிக்கிறான். அவன் ஒரு மருத்துவர் என்று அறிந்துகொள்ளும் சுவாதி அவன் சிறைக்கைதியான காரணத்தைக் கேட்க விஸ்வநாத் அவன் சோகக்கதையைக் கூறுகிறான்.
மைக்கேலுக்குச் (பிரகாஷ் ராஜ்) சொந்தமான மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் விஸ்வநாத். பணம் மட்டுமே மைக்கேலின் குறிக்கோள். விஸ்வநாத் நோயாளிகளின் நலனில் அக்கறை செலுத்துபவன். இவர்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நிகழ்கிறது. எனவே அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறி வேறொரு மருத்துவமனையில் பணிபுரிகிறான். விஸ்வநாத் விலகியதால் நோயாளிகள் வருவது குறைந்து மைக்கேல் நட்டமடைகிறான். விஸ்வநாத் பணிபுரியும் மருத்துவமனை லாபகரமாக இயங்குகிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு சட்டவிரோதமாக தீவிரவாதிகளுக்கு சிகிச்சையளிக்கிறான் மைக்கேல். அவர்களிடம் உள்ள ஆயுதங்களை விஸ்வநாத்தின் மருத்துவமனையில் பதுக்கிவைத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். மருத்துவமனையை சோதனையிடும் காவல்துறை விஸ்வநாத்தை கைது செய்கிறது. தன் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி அறிந்த அவன் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஜெனிபரை (மோகினி) கொன்றுவிடுகிறான் மைக்கேல்.
தப்பியோடிய விஸ்வநாத்தைக் கைது செய்யும் பொறுப்பு காவல் அதிகாரி ராஜ்குமாரிடம் (ராதாரவி) ஒப்படைக்கப்படுகிறது. சுவாதி விஸ்வநாத்தை காதலிக்கிறாள். விஸ்வநாத் தான் நிரபராதி என்று நிரூபித்து தண்டனையிலிருந்து தப்பினானா? என்பது மீதிக்கதை.
Remove ads
நடிகர்கள்
- சரவணன் - விஸ்வநாத்
- மோகினி - ஜெனிபர்
- சுவாதி - சுவாதி
- ராதாரவி - ராஜ்குமார்
- பிரகாஷ் ராஜ் - மைக்கேல்
- மணிவண்ணன் - நாராயணன்
- செந்தில் - சங்கர்லால்
- சிந்து - சிந்து
- டி. எஸ். ராகவேந்திரா
- வி. கோபாலகிருஷ்ணன்
- இடிச்சபுளி செல்வராஜ் - செல்வராஜ்
- கருப்பு சுப்பையா - காதர் பாய்
- திடீர் கண்ணய்யா
- குமரிமுத்து
- மகாநதி சங்கர் - டேவிட்
- அருள்மணி
- ஜோதி மீனா
இசை
படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர் வாலி.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads