திகம்பர சாமியார்

திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் இயக்கத்தில் 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

திகம்பர சாமியார்
Remove ads

திகம்பர சாமியார் (Thigambara Samiar) 1950 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் தயாரித்து, இயக்கி வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். என். நம்பியார், டி. பாலசுப்பிரமணியம், பி. வி. நரசிம்ம பாரதி ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3]

விரைவான உண்மைகள் திகம்பர சாமியார், இயக்கம் ...
Remove ads

திரைக்கதை

கும்பகோணத்தைச் சேர்ந்த நேர்மையற்ற ஒரு வழக்கறிஞரான சட்டநாதன் வடிவாம்பாள் என்ற பெண்ணைத் தன் உதவாக்கரைத் தம்பி மாசிலாமணிக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் வடிவாம்பாள் கண்ணப்பன் என்ற அழகான இளைஞனை விரும்புகிறாள். திகம்பர சாமியார் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் சாமியார் உடையணிந்த ஒருவன் வழக்கறிஞரின் திருகுதாளங்களை அம்பலப் படுத்த முயற்சி செய்கிறான். கதையில் பல திருப்பங்கள் வருகின்றன. அவன் பல தடவைகள் தன் உருவத்தை மாற்றிக் கொள்கிறான். இறுதியில் தான் எடுத்த முயற்சியில் வெற்றி பெறுகிறான்.
ஒருவரை 3, 4 நாட்கள் தூங்க விடாமற் செய்தால் தன் மனதில் ஒளித்து வைத்திருக்கும் இரகசியங்களை வெளியில் சொல்லிவிடுவான் என்ற கருத்து இந்தக் கதையில் வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்கறிஞர் தூங்காமல் இருப்பதற்காக, திரைப்படத்தில் லலிதா, பத்மினி, குமாரி கமலா ஆகியோரின் நடனங்கள் இடம் பெற்றுள்ளன.[2]

Remove ads

நடிகர்கள்

ஆண்
பெண்
  • எம். எஸ். திரௌபதி - வடிவாம்பாள்
  • லட்சுமிபிரபா - அலங்காரம்
  • சி. கே. சரஸ்வதி - அஞ்சலி
  • பேபி லலிதா - சந்திரா
  • கே. டி. தனலட்சுமி
  • கே. ஜெயலட்சுமி
  • கமலம்
  • கண்ணம்மா
  • சரஸ்வதி
நடனம்
Remove ads

தயாரிப்புக் குழு

  • இயக்குநர் = டி. ஆர். சுந்தரம்
  • ஒளிப்பதிவு = ஜி. ஆர். நாதன்
    டி. எஸ். கோட்னிஸ்
  • ஒலிப்பதிவு = எஸ். பத்மநாபன்
    டி. எஸ். ராஜு
  • நடனப்பயிற்சி = வழுவூர் பி. இராமையா பிள்ளை, மாதவன், ஆர். டி. கிருஷ்ணமூர்த்தி
  • கலையகம் = மாடர்ன் தியேட்டர்ஸ், சேலம்

வரவேற்பு

பல்வேறு வேடங்களில் வரும் எம். என். நம்பியாரின் நடிப்புக்காகவும், பிரபலமான பாடல்களுக்காகவும் இத்திரைப்படம் நினைவில் நிறைந்திருக்கும் என திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை எழுதியுள்ளார்.[2]

பாடல்கள்

இத்திரைப்படத்துக்கு இசையமைத்தவர்கள்: ஜி. ராமநாதன், எஸ். எம். சுப்பையா நாயுடு ஆகியோர். பாடல்களை கா. மு. ஷெரீப், ஏ. மருதகாசி, கே. பி. காமாட்சிசுந்தரம், கண்ணதாசன், தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் இயற்றினர். பின்னணி பாடியோர்:கே. வி. ஜானகி, யு. ஆர். சந்திரா, கே. பி. கோமளம், டி. ஆர். கஜலட்சுமி, பி. லீலா, மாஸ்டர் சுப்பையா ஆகியோர்.[2]

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், பாடல் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads