வீராம்பட்டினம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வீராம்பட்டினம் (Veerampattinam) புதுச்சேரி ஒன்றியப் பகுதியில், அரியாங்குப்பம் ஊராட்சியில் அமைந்த கடற்கரை கிராமம் ஆகும். கடலூருக்கும், புதுச்சேரிக்கும் இடையே அமைந்த வீராம்பட்டினம் கிராமம் ஒரு தொல்லியல் களம் ஆகும்.

Remove ads
அமைவிடம்
அழகிய கடற்கரை கொண்ட வீராம்பட்டின கிராமம், புதுச்சேரி நகரத்திலிருந்து வடக்கே 7 கி.மீ. தொலைவில் உள்ள அரியாங்குப்பத்திற்கு கிழக்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது.
சிறப்புகள்
இக்கிராமம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்டது. இக்கிராமம் அழகிய நீண்ட கடற்கரை கொண்டது. இக்கிராமத்தின் முதன்மைப் பொருளாதாரம் மீன் பிடித்தலாகும்.
தொல்லியல் எச்சங்கள்
அரிக்கமேடு தொல்லியல் களத்தை அகழ்வாராய்ச்சி செய்த போது, வீராம்பட்டினம் கிராமத்தில் கி.பி. முதல் நூற்றாண்டில் உரோமானியர்கள் பயன்படுத்திய சுடுமட்பொம்மைகள், நாணயங்கள், ஆண்/பெண் மற்றும் விலங்குகளின் உருவங்களுடன் கூடிய சுடுமண் ஓடுகள் போன்ற பல தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
- வீராம்பட்டினத்தில் கிடைத்த கி.பி. 1 - 2 நூற்றாண்டின் குழந்தை பொம்மை, குய்மெட் அருங்காட்சியகம்
- வீராம்பட்டினத்தில் கிடைத்த கி.பி. முதல் நூற்றாண்டின் ரோமானிய மட்பாண்டத்தின் துண்டு, குய்மெட் அருங்காட்சியகம்
- வீராம்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண் மற்றும் விலங்குகளின் உருவங்கள் வரையப்பட்ட ரோமானிய மட்பாண்டத்தின் துண்டு, ஆண்டு கி.பி. முதல் நூற்றாண்டு
Remove ads
கல்வி
இக்கிராமத்தில் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி என மூன்று அரசுப் பள்ளிகள் உள்ளது.
திருவிழாக்கள்

இக்கிராம தேவதையான செங்கழுநீர் அம்மன் கோவில் தேர்த்திருவிழா[1] ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மேலும் மாசி மகம் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாவின் போது, கிராம தெய்வங்களை கடற்கரையில் எழுந்தருளச் செய்து மக்கள் வழிபடுவர்.
வீராம்பட்டின கடற்கரைக் காட்சிகள்
வீராம்பட்டினத்தின் நுழைவாயில் கடற்கரை கோயில் குளம் கடற்கரை நுழைவு வாயில் கடற்குச்சிகளுடன் கூடிய கடற்கரை கடற்கரையின் காலைக் காட்சி மீன் பிடி படகுகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads