புதுச்சேரி மாவட்டம்

புதுச்சேரியில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

புதுச்சேரி மாவட்டம்map
Remove ads

புதுச்சேரி மாவட்டம் (Puducherry district) ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். புதுச்சேரி மாவட்டம் 290 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள், தென் இந்தியாவின் கிழக்கு கடற்கரை ஓரமாக அமைத்துள்ளது. இந்த மாவட்டத்தின் சராசரி ஆண்டு வெப்ப நிலை 30 செல்சியசு ஆகும். இம்மாவடத்தில் 70-85% ஈரப்பதம் நிலவும் பகுதி ஆகும். மேலும் வடகிழக்கு பருவமழை பொழியும் பகுதியாகும். இம்மாவட்டத்தின் பெரும் பகுதி, சமமான பகுதிகள் ஆகும். அவை கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 15 மீ உயரத்தில் உள்ளது. மேலும் புதுச்சேரி பகுதி செஞ்சி ஆறு மற்றும் பெண்ணையாற்றின் இடையே அமைந்துள்ள கடைமடை பகுதியாகும். மேலும், பல ஏரிகள், குளங்கள் நிறைந்த பகுதியாகும். புதுவையின் வடமேற்கு பகுதி கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 30 மீ. உயரத்தில் அமைந்து உள்ளது.

விரைவான உண்மைகள் புதுச்சேரி மாவட்டம், நாடு ...
Thumb
புவியியல்படி, புதுச்சேரி மாவட்டம் மிகவும் சிதறிய நிலப்பகுதியாகும்.
Remove ads

நிர்வாகக் கோட்டங்கள்

மேலதிகத் தகவல்கள் மாவட்டம், வட்டங்கள் ...

நிர்வாக வசதிக்காக புதுச்சேரி ஒன்றியப் பகுதி எட்டு தாலுக்காக்களாக (வட்டங்களாக) பிரிக்கப்பட்டுள்ளது.[2] இவற்றில் நான்கு, புதுச்சேரி, உழவர்கரை, வில்லியனூர் மற்றும் பாகூர் இணைந்து புதுச்சேரி மாவட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.[2] இந்த நான்கில், உழவர்கரை வட்டத்தில் ஊரகப் பகுதிகள் எதுவும் இல்லை.[3] மற்ற மூன்று வட்டங்களின் ஊரகப் பகுதிகளும், மேலும் கொம்யூன் பஞ்சாயத்துக்கள் (CP) அல்லது கொம்யூன்கள் என பிரிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி வட்டத்தின் ஊரகப் பகுதிகள் ஒரே கொம்யூனாக, அரியாங்குப்பம் கொம்யூன் உள்ளது. வில்லியனூர் வட்டத்தில் இரண்டு கொம்யூன்கள் உள்ளன: வில்லியனூர் கொம்யூன் மற்றும் மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆகும். பாகூரில் உள்ள இரு கொம்யூன்கள் பாகூரும் மற்றும் நெட்டப்பாக்கமும் ஆகும்.[3]

2011 கணக்கெடுப்பு ஏற்கனவே உள்ள மூன்று நகரங்களைத் தவிர மூன்று பகுதிகளை நகரங்களாக கண்டறிந்துள்ளது.[3] புதுச்சேரி மற்றும் உழவர்கரை இரண்டும் நகராட்சிகளாகும். குரும்பாபேட் ஒரு சிற்றூர் பஞ்சாயத்தாகும். கணக்கெடுப்பின்படியான நகரங்கள்; அரியாங்குப்பம், மனவெலி, மற்றும் வில்லியனூராகும்.[4] புதுச்சேரி நகர்ப்புறத் திரள் இந்த ஆறு நகரப்பகுதிகளையும் ஓடியம்பேட்டையையும் உள்ளடக்கியது.[4]

நிர்வாக வசதிக்காக, புதுவை அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, புதுச்சேரி மாவட்டத்தை இரு உட்கோட்டங்களாகப் பிரித்துள்ளது: புதுச்சேரி வடக்கு மற்றும் புதுச்சேரி தெற்கு.[5] புதுச்சேரி வடக்கு உட்கோட்டத்தில் புதுச்சேரி மற்றும் உழவர்கரை வட்டங்கள் உள்ளன. புதுச்சேரி தெற்கு உட்கோட்டத்தில் மற்ற இரு வட்டங்களான வில்லியனூரும், பாகூரும் உள்ளன.[6] இந்த நான்கு வட்டங்களும் மேற்படியாக வருவாய்த்துறை வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

Remove ads

மக்கள் தொகை

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, புதுச்சேரி மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 950,289 ஆகும். இதில் 468,258 ஆண்களும் மற்றும் 482,031 பெண்களும் உள்ளனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 85.44 ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.23 ஆகவும், பெண்களின் படிப்பறிவு 79.86 ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 99,838 ஆக உள்ளது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 29.23% ஆக உள்ளது.[7]

Remove ads

கல்வியகங்கள்

இம்மாவட்டத்தின் பெரும்பான்மையான கல்வியகங்களில் பிரெஞ்சு மொழியும் கற்பிக்கப்படுகின்றன. ஏறத்தாழ 12 கல்லூரிகளும், பல்கலைக் கழகமும் உள்ளன. அவை, வில்லியனூரில், ஆச்சார்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியும், திருவாண்டார்கோவில் கிராமத்தில் மகளிருக்கென அவ்வையார் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி மகளிர் கல்லூரியும், ஆல்ஃபா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியும், மூலக்குளத்தில் கிறிஸ்துவ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியும், ஆனந்தநகரில் இருக்கும் அருட்பெருஞ்சோதி ராமலிங்கசாமி கல்வியியல் கல்லூரியும், வில்லியனூரில் இருக்கும் ஆச்சார்யா கல்வியியல் கல்லூரியும், ஆச்சார்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், கண்ணூர் கிராமத்தில் இருக்கும் ஆல்ஃபா பி.டி கல்லூரியும், பகீர் கம்யூனில் இருக்கும் ஏ.ஜி.பத்மாவதி நர்சிங் கல்லூரியும், பிச்சவீராம்பட்டில் இருக்கும் கிறிஸ்துவ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியும், முத்தியல்பேட்டையில் இருக்கும் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியும் முக்கிய கல்லூரி வளாகங்கள் ஆகும்.[8]

சுற்றுலா

Thumb
புதுச்சேரி கடற்கரை காட்சி

இம்மாவட்டத்தில் பல வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா இடங்கள் உள்ளன. அவற்றினுள் சிலவற்றை இங்கு காண்போம். பாரதி பூங்கா, ரூ செயின்ட் கில்ஸ் வீதி, வொய்ட் டவுன் என்பதானது பழைய பாண்டிச்சேரி நகரின் நடுவில் பாரதி பூங்கா உள்ளது. இராஜ்பவனுக்கு எதிரே உள்ள ஒரு அழகிய பூங்கா ஆகும். இங்கு உருவாக்கப்பட்ட தாவரவியல் பூங்காவான பாண்டிச்சேரி தோட்டம் மிகவும் பழமையான மரங்களையும், பெரிய வகை தாவரங்களையும் கொண்டிருக்கின்றன. உலக வரலாற்று நினைவு இடமான, பிரன்ச்சு முதல் உலகப்போர் நினைவுச் சின்னம் காண பல அயல்நாட்டினர் வந்து செல்கின்றனர். ஆரோவில்லும், பழைய துறைமுகமும், சுண்ணாம்பாறு படகு இல்லமும் சுற்றுலா வருகையோர் அதிகமுள்ள இடங்களாகும்.[9]

ஆரோவில்

ஆரோவில் (Auroville) என்பது தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்(யுனெஸ்கோ) உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நகரமாகும். புதுச்சேரிக்கு அருகில் அமைந்துள்ளது. இது தற்போது மத்திய அரசின் மேற்பார்வையில் உள்ளது.எல்லா நாடுகளையும் சேர்ந்த ஆண்களும், பெண்களும் மதக் கோட்பாடுகளையெல்லாம் அரசியல் ஈடுபாடுகளையெல்லாம் நாட்டுப்பற்றுகளையெல்லாம் தாண்டி அமைதி, மேலும் மேலும் சிறந்து வளரும் சமூகம் முதலியவற்றின் அடிப்படையில் வாழக்கூடிய ஒரு சர்வதேச நகரமாக இருக்க ஆரோவில் இருக்க விரும்புகிறது.[10]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads