வெண்கல கரிச்சான்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெண்கல கரிச்சான் (டைகுருசு ஏனியசு) என்பது கரிச்சான் குழுவைச் சேர்ந்த ஒரு சிறிய இந்தோமலையா பறவை சிற்றினமாகும். இவை இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் காடுகளில் வசிக்கின்றன. காடு மேடுகளின் நிழலில் பறக்கும் பூச்சிகளை வான்வழியில் பிடித்து உண்ணுகின்றன. இவை இப்பகுதியில் உள்ள மற்ற கரிச்சான்களுடன் மிகவும் ஒத்துக் காணப்படுகின்றன. ஆனால் இவை சற்றே சிறியதாகவும், சரியான அளவில் பிளவுபட்ட வால் இறகினைக் கொண்டிருக்கும்.
Remove ads
விளக்கம்
இந்த கரிச்சான் இரட்டைவால் குருவியை விடச் சற்றே சிறியது. இதன் தலை, கழுத்து மற்றும் மார்பகத்தின் மீது வளைந்த தோற்ற உலோக பளபளப்பு காணப்படும். நாசிக்கும் கண்களுக்கும் இடைப்பட்ட பகுதி வெல்வெட் தன்மையுடன், காது உறைகள் மந்தமாகக் காணப்படும். வால் மெல்லியதாகவும், வெளிப்புற வால் இறகுகள் சற்றே வெளிப்புறமாகக் காணப்படும். முதிர்ச்சியடையாத வற்றின் இறகுகள் வெள்ளை நிறத்தில் இருக்கும்.[2] இளம் பறவையானது மந்தமாகவும், பழுப்பு நிறமாகவும் காணப்படும்.
பரிந்துரைக்கப்பட்ட சிற்றினம் இந்தியாவில் காணப்படுகிறது. இவை மலாய் தீபகற்பத்தின் வடக்கு பகுதி வரை பரவியுள்ளது. தென்னிந்தியாவிலிருந்து வரும் மாதிரிகள், பர்மாவின் மலாயென்சிசு மாதிரிகள் மார்போமெட்ரிக்சினை மிகவும் ஒத்திருக்கிறது. சீனா குவாங்சியென்சிசின் துணையினங்கள் ஏனியசுக்கு ஒத்ததாகக் கருதப்படுகின்றன . சிலாங்கூர் தெற்கிலிருந்து சுமத்ரா மற்றும் போர்னியோவில் துணையினம் மலயன்சிசு காணப்படுகிறது. தைவான் உள்பகுதியில் உள்ள மலைகள் பிரவுனியானசின் தாயகமாகும்.[2][3][4]
Remove ads
பரவல்
வெண்கல கரிச்சான் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்கு உத்தராஞ்சலில் இருந்து கிழக்கு நோக்கி இந்தோசீனா மற்றும் ஹீனான், மலாய் தீபகற்பம், சுமத்ரா மற்றும் வடக்கு போர்னியோ வரை கீழ் இமயமலையில் காணப்படுகிறது. இந்த சிற்றினம் பொதுவாக ஈரமான அகன்ற காடுகளில் காணப்படுகிறது.[2] இந்த சிற்றினம் வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.[5]
நடத்தை
இவை தனித்தனியாக அல்லது இரண்டு முதல் மூன்று பேர் கொண்ட குழுவாகவோ காணப்படும். வான்வழி பறந்து பூச்சிகளைத் தீவிரமாக வேட்டையாடி உண்ணுகின்றன. இவை சில சமயங்களில் உணவு தேடும் பிற சிற்றினங்களுடன் இணைந்து வேட்டையாடுகின்றன.[6] இவை பிற பறவை சிற்றினங்களின் அழைப்புகளைப் பிரதிபலிப்பதில் மிகச் சிறந்தவை. இது பல கரிச்சான் சிற்றினங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு பண்பு ஆகும்.[7] இனப்பெருக்க காலம் பிப்ரவரி முதல் சூலை வரை. மூன்று அல்லது நான்கு இளஞ்சிவப்பு முதல் பழுப்பு நிற முட்டைகள் மரத்தின் கிளைப்பிரிவில் கட்டப்படும் கோப்பை வடிவக் கூடுகளில் இடுகின்றன. இதன் கூடுகள் சிலந்தி வலைகளால் மூடப்பட்டிருப்பதால் வெண்மையாகத் தோன்றும். இவை ஆக்குரோசமான அதே நேரம் அச்சமற்ற பறவைகள் ஆகும். சுமார் 24 செ.மீ. நீளமுடைய இப்பறவைகள் இவற்றின் கூடோ குஞ்சுகளோ அச்சுறுத்தப்படும் போது, அச்சுறுத்தும் விலங்கு இவற்றைவிடப் மிகப் பெரியதாக இருப்பினும் தாக்குவதற்குத் தயங்குவதில்லை.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads