வெண்தலைக் கழுகு

வெண்டலைக் கழுகு வட அமெரிக்க கண்டத்தில் வாழும் கழுகினமாகும் From Wikipedia, the free encyclopedia

வெண்தலைக் கழுகு
Remove ads

வெண்டலைக் கழுகு (Haliaeetus leucocephalus) என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு கழுகினங்களில் ஒன் றாகும் (மற்றையது பொன்னாங் கழுகு). இக்கழுகு எளிதில் அறியக்கூடிய வகையில், தலை முழுவதும் வெள்ளையாய் இருக்கும். இதன் கூரிய நுனியுடைய வளைந்த அலகு மஞ்சள் நிறத்தில் இருக்கும். உடல் கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

விரைவான உண்மைகள் வெண்டலைக் கழுகு, காப்பு நிலை ...

இக்கழுகை அமெரிக்கக் கழுகு என்று சிறப்பித்துக் கூறும் வழக்கும் உண்டு. ஏனெனில், இதுதான் அமெரிக்க கூட்டு நாடுகளின் நாட்டுப் பறவை என சிறப்பிக்கப்படுவது.[2] இவற்றை அமெரிக்க கூட்டு நாடுகளிலும் கனடாவிலும் காணலாம். இப்பறவை பல்வகையான காரணங்களினால் மிக அருகி வந்து இவ்வினமே அற்றுப் போய்விடும் நிலையில் இருந்தது. தக்க நேரத்தில் போதிய காப்பளித்து இப்பொழுது (2006ஆம் ஆண்டு) சுமார் 100,000 பறவைகள் உள்ளன. இவற்றுள் பாதி அமெரிக்க கூட்டு நாடுகளைச் சேர்ந்த அலாஸ்காவில் வாழ்கின்றன.

இப்பறவைகள் சுமார் 50 ஆண்டுகள் உயிர்வாழ்வன. கொன்றுண்ணிப் பறவைகளான இவை மீன், சிறுபறவைகள், எலி முதலியவைகளைத் தின்னும். இவை பறந்து வந்து நீரில் உள்ள மீன்களைப் பற்றுவதில் திறமையானவை.

இது மற்ற வடஅமெரிக்க பறவைகளை விடவும் மிகப் பெரிய கூடுகளைக் கட்டுகின்றன. இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய மர கூடுகள், குறிப்பாக பறவைகள் கட்டும் மர கூடுகளிலேயே மிகப்பெரிய கூடு இவ்வினப் பறவைகள் கட்டியது தான். இக்கூடுகள் 4 மீ (13 அடி) ஆழமான, 2.5 மீ (8.2 அடி) அகலம் வரை, மற்றும் 1 மெட்ரிக் டன் (எடை 1.1 டன்கள்) எடையுள்ளது.

Remove ads

பெயர்

வெண்டலைக் கழுகு என்று தமிழில் அழைக்கப்படும் இக்கழுகுகள் ஆங்கிலத்தில் "பால்ட் ஈகிள்" அல்லது "பால்ட் கழுகு" என அழைக்கபடுகிறது. தற்போதய ஆங்கிலத்தில் "பால்ட்" என்றால் வழுக்கை என அர்த்தம். ஆனால் இக் கழுகுகளுக்கு உண்மையில் வழுக்கை இல்லை. அதனால் இவற்றின் பெயர் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் ஆங்கிலத்தில் "பால்ட்" எனும் வார்த்தைக்கு வெண்ணிற தலை என்ற அர்த்தமும் உண்டு. இக்கழுகுகளின் தலை வெண்ணிறத்தில் உள்ளதால் இப்பெயரை இக்கழுகுகள் பெற்றன.[3][4]

Remove ads

கலாச்சார முக்கியத்துவம்

பல்வேறு அமெரிக்க இனக் கலாச்சாரங்களில் வெண்தலைக் கழுகு மிக முக்கியமானது. இது அமெரிக்காவின் தேசிய பறவையாகும். முத்திரைகள், சின்னங்கள், நாணயங்கள், அஞ்சல் முத்திரைகள், மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மத்திய அரசாங்கத்துடன் தொடர்புடைய பிற பொருட்களில் வெண்தலைக் கழுகு மிக முக்கியமாக கருதப்படுகிறது. இக் கழுகு அமெரிக்க கூட்டு நாடுகளின் நாட்டுப் பறவை என சிறப்பிக்கப்படுவது.

அமெரிக்காவின் நிறுவனர்கள் (founders) தங்கள் புதிய குடியரசை ரோமானிய குடியரசுடன் ஒப்பிடுவதில் பிடிவாதமாக இருந்தனர், அதில் கழுகுப் படம் (பொதுவாக தங்கக் கழுகு சம்பந்தப்பட்டிருந்தது) முக்கியமானது.

Remove ads

வாழ்விடம்

கனடாவின் பெரும்பகுதி, அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளிலும் மற்றும் வடக்கு மெக்ஸிகோ உட்பட வட அமெரிக்காவின் பெரும்பகுதிகளில் வெண்தலைக் கழுகு வாழ்கிறது. வெண்தலைக் கழுகுகள் கடல்கள், ஆறுகள், பெரிய ஏரிகள், சமுத்திரங்கள் மற்றும் பிற பெரிய தண்ணீர் நிறைந்த இடங்கள் மற்றும் மீன் நிறைய உள்ள இடங்களின் அருகில் வாழ்கின்றன.

வெண்தலைக் கழுகுகளுக்கு வாழ, தூங்க, கூடுகள் கட்ட என பழைய மற்றும் கடுமையான மரங்களை நாடும். வெண்தலைக் கழுகுகள் துளைகள் கொண்ட மரங்கள் மற்றும் விலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக உள்ள இடங்களை அதிகம் விரும்பும்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads