வேடசந்தூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேடசந்தூர் (ஆங்கிலம்:Vedasandur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். வேடச்சந்தூர் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
வேடசந்தூர் பேரூராட்சி திண்டுக்கல் நகரத்திலிருந்து திண்டுக்கல் - கரூர் செல்லும் சாலையில் 22 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் 13 கி.மீ. தொலைவில் உள்ள எரியோடு ஆகும்.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 11,730 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 2.13 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,046 வீடுகளும், 11,730 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 87.1%மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,012 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 995 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,440 மற்றும் 1 ஆகவுள்ளனர்.[5]
Remove ads
பெயர்க்காரணம்
அன்றைய நாட்களில் திண்டுக்கல்லிற்கு வடக்கே ரங்காமலைக்கு தெற்கே இடைப்பட்ட நிலபரப்பு காட்டுப்பகுதியாக இருந்தது. அங்கு வேட்டையாடிய வேடர்கள் தங்கள் வேட்டையில் கிடைத்த பொருட்களை அதாவது விலங்குகளின் தோல்கள், கொம்பு, பாடம் செய்யப்பட்ட விலங்குகளின் உடல்கள், தேன் மற்றும் தங்கள் வேட்டையில் கிடைத்த இன்ன பிற பொருட்கள் அனைத்தையும் ஒரு இடத்தில் சந்தையிட்டனர். மக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த சந்தையில் வங்கிச் சென்றனர். வேடர்கள் இந்த இடத்தில் சந்தையிட்டதால் இவ்விடம் வேடன் சந்தையூர் என அழைக்கப்பட்டது. வேடன் சந்தையூர் காலப்போக்கில் மருவி வேடசந்தூர் ஆனது.
Remove ads
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10.53°N 77.95°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 219 மீட்டர் (718 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads