ஹலாப்ஜா மாகாணம்

ஈராக் குர்திஸ்தானின் ஒரு மாகாணம் From Wikipedia, the free encyclopedia

ஹலாப்ஜா மாகாணம்map
Remove ads

ஹலாப்ஜா கவர்னரேட் அல்லது ஹலாப்ஜா மாகாணம் (Halabja Governorate, குர்தியம்: پارێزگای ھەڵەبجە , Parêzgeha Helebceyê,[4][5] அரபி: محافظة حلبجة, romanized: Muḥāfaẓat Ḥalabǧa) என்பது ஈராக்கின் குர்திஸ்தான் தன்னாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இந்த மாகாணம் 2014 இல் சுலைமானியா மாகாணத்திலிருந்து பிரித்து நிறுவப்பட்டது. இது ஈராக்கிய குர்திஸ்தான் பகுதியின் நான்காவது மாகாணமாக ஆனது [6] [7] இதன் தலைநகரம் ஹலாப்ஜா நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் ஹலாப்ஜா மாகாணம் پارێزگای ھەڵەبجە , Parêzgeha Helebceyêمحافظة حلبجة, Country ...

குர்திஷ் பாராளுமன்றம் முதலில் ஹலாப்ஜா மாவட்டத்தை 1999 ஆம் ஆண்டில் ஒரு மாகாணமாக மாற்ற ஒப்புக்கொண்டது. ஆனால் அது அப்போது செயல்படுத்தப்படவில்லை. குர்திஸ்தான் பிராந்தியம் 2013 சூனில் மாகாணமாக மாறுவதற்கு ஒப்புதல் அளித்தது. ஈராக்கின் அமைச்சரவை 31 டிசம்பர் 2013 அன்று இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. [8] ஈராக் பாராளுமன்றம் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டியிருந்தது, ஆனால் அந்த மசோதா பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தது. இருப்பினும், ஹலப்ஜாவை ஒரு மாகாணமாக மாற்ற குர்திஸ்தானுக்கு அதிகாரம் இருப்பதாக சபாநாயகர் ஒசாமா நுஜைஃபி அறிவுறுத்தினார். 13 மார்ச் 2014 அன்று, குர்திஸ்தானின் பிரதமர் நெச்சிர்வன் பர்சானி, ஹலப்ஜா மாவட்டத்தை குர்திஸ்தான் பிராந்தியத்தின் நான்காவது மாகாணமாக மாற்றுவதற்கான முடிவில் கையெழுத்திட்டார்; இது மார்ச் 16, 1988 அன்று நடந்த ஹலாப்ஜா இரசாயன தாக்குதலை நினைவுகூருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு நடந்தது. மார்ச் 16, 2014 அன்று, ஹலப்ஜாவை மாவட்ட அந்தஸ்திலிருந்து மாகாணமாக உயர்த்துவதற்கான பிராந்திய உத்தரவில் குர்திஸ்தான் பிராந்தியத் தலைவர் மசூத் பர்சானி கையெழுத்திட்டார். [9] மாகாண சபை மற்றும் ஆளுநரைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்ட கட்டமைப்பை நிறுவ குர்திஷ் நாடாளுமன்றம் பிப்ரவரி 2015 இல் ஒரு மசோதாவை நிறைவேற்றியது. 2015 திசம்பர் நிலவரப்படி, ஈராக் பாராளுமன்றம் இன்னும் மாகாணத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. [10] ஆகஸ்ட் 2018 இல், அப்போதைய ஈராக்கிய உள்துறை அமைச்சர் காசிம் அல்-அராஜி, கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டைகள் போன்ற பிற குடிமை ஆவணங்களை அதன் தற்போதைய பெயரில் வழங்கும் கூட்டாட்சி அலுவலகங்களைத் திறப்பதற்கான அங்கீகாரத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

Remove ads

மாவட்டங்கள்

இந்த மாகாணமானது ஹலாப்ஜா மத்திய மாவட்டம், ஹலாப்ஜா மற்றும் சிர்வான், குர்மல் மற்றும் பைரா (பயாரா) ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது. சுலைமானியா மாகாணத்தின் மூன்று மாவட்டங்கள் இந்த மாகாணத்தில் சேர விருப்பம் தெரிவிக்கபட்டது. ஆனால் அதற்கு எதிராக முடிவு எடுக்கபட்டது. [10]

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads