எறாத்து மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

எறாத்து மாகாணம்map
Remove ads

எறாத்து அல்லது ஹெறாத்து (Herat (பஷ்தூ/Dari: هرات) என்பது ஆப்கானித்தானின் முப்பத்து நான்கு மாகாணங்களில் ஒன்று. இது நாட்டின் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது. இது பட்கிஸ் மாகாணம், பரா மாகாணம், கோர் மாகாணம் ஆகிய மாகாணங்களுடன் நாட்டின் வட-மேற்கு மண்டலத்தில் உள்ளது. இந்த மாகாணத்தின் முதன்மையான நகராகவும், தலைநகராகவும் ஹெறாத் நகரம் உள்ளது. எறாத்து மாகாணமானது 17 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, 1000 கிராமங்களைக் கொண்டதாக உள்ளது. மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 1,780,000 ஆகும். இது மக்கட்தொகையை அளவில் காபூல் மாகாணத்தையடுத்த இரண்டாவது பெரிய மாகாணமாகும். மாகாணத்தில் பல இனக்குழுவினர் வழ்கின்றனர் என்றாலும் அவர்களில் பாரசீகம் பேசும் மக்களே பெரும்பான்மையினர்.

விரைவான உண்மைகள் எறாத்துHerat هرات, நாடு ...

எறாத்து மாகாணத்தின் மேற்கில் ஈரானும், வடக்கில் துர்க்மெனிஸ்தானும் எல்லைகளைக் கொண்டுள்ளன. இதனால் இது வர்த்தகம் மிகுந்த மாகாணமாக உள்ளது அமைந்துள்ளது. துர்க்மெனித்தான்–ஆப்கானித்தான்–பாக்கித்தான்–இந்தியா எரிபொருள் குழாய் பாதையானது (TAPI) துர்க்மெனிதாதானில் இருந்து பாக்கித்தான், இந்தியாவிக்கு எறாத்து மாகாணத்தின் வழியாக தெற்கில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாகாணத்தில் இரண்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன. ஒன்று மாகாணத் தலைநகரான ஹெரத்தில் உள்ள ஹெரத் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றொன்று ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய இராணுவ தளங்களில் ஒன்றான ஷிந்தாண்ட் ஏர் பேஸ் ஆகும். ஹரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சல்மா அணை இந்த மாகாணத்தில் அமைந்துள்ளது. நதியினால் வழங்கப்படும் சல்மா அணை அமைந்துள்ளது.

Remove ads

வரலாறு

வரலாற்று ரீதியாக எறாத்து பகுதியானது குராசானின் ஒரு பகுதியாக இருந்தது. அதைத் தொடர்ந்து தஹிரிடிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது, அதைத் தொடர்ந்து சபாரித்து வம்சம், சாமனித்து பேரரசு, காஸ்நவிட்ஸ், குர்விட்ஸ், இல்கானேட்டுஸ், டிமூரிட்ஸ், சபாவித்து வம்சம், ஹொட்டிகிஸ், அப்ஷரிட்ஸ், துராணிப் பேரரசு, கஜரிட்ஸ் என நவீன ஆப்கானித்தானின் மாகாணப்பகுதியாக மாறும்வரை பலரால் ஆளப்பட்டது.

Thumb
மாகாணத்தின் மலைநகரான ஹெறாத் நகரம்.
Thumb
ஷிண்டண்ட் வானூர்தி நிலையத்தின் இறங்குதளத்தில், ஆப்கானிய விமானப்படையின் மிக் 17 உலங்கு வானூர்தி 2011 ஆம் ஆண்டிய காட்சி.

1980 களில் சோவியத் போரின் போது இந்த மாகாணமானது பல போர்களைக் கண்டது. அப்போது சோவியத் ஆதரவு பெற்ற ஆப்கானிய அரசாங்கத்திற்கு எதிராக உள்ளூர் முஜாஹிதீன் தளபதியான இஸ்மாயில் கானினின், கெரில்லா படைகளின் ஒரு தீவிர போர்ப் பகுதியாக இது இருந்தது. 1989 இல் சோவியத் ஒன்றியம் அதன் படைகளனைத்தையும் திரும்பப் பெறும் வரை இது நீடித்தது.

சோவியத்துகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியபிறகு, இஸ்மாயில் கான் மாகாணத்தின் ஆளுநராக ஆனார். தெற்கிலிருந்து தலிபான் படைகள் 1995 இல் மாகாணத்தை கைப்பற்றும் வரை அவர் ஆளுநராக இருந்தார். ஹமீத் கர்சாய் தலைமையிலான கர்சாய் நிர்வாகம் தலிபான்களை அகற்றிய பிறகு, இஸ்மாயில் கான் மீண்டும் ஹெரட்டின் ஆளுநர் ஆனார்.

மாகாணத்தில் ஊடக சுதந்திரம், மக்களின் சுதந்திரம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த முயல்பவராகவும், முரட்டுத்தனமான சுதந்திர ஆட்சியாளராகவும் இஸ்மாயில் கான் இருக்கிறார் என ஊடகங்கள் விவாதத்தைக் கிளப்பியபோது இவர் சர்ச்சைக்குறிய நபராக மாறினார். 2004 இல் ஒரு உள்ளூர் ராணுவ தலைவரின் படைகளுடன் நடந்த ஒரு சண்டையில் இவரின் மகனான மிர்விஸ் சாதிக்கை இழந்தார். இதன் எதிரோலியாக, மத்திய அரசாங்கமானது, புதிதாக பயிற்சியளிக்கப்பட்ட ஆப்கானிய தேசிய பாதுகாப்புப் படைகளின் ஆளுமைக்குள் மாகாணத்தைக் கொண்டுவந்தது. இஸ்மாயில் கான் தனது ஆளுநர் பதவியை விட்டுவிட்டு ஒரு அமைச்சராக காபூலில் வாழ உத்தரவிட்டார்.

2005 க்குப் பின்னர், ஆப்கானிய அரசாங்கத்திற்கு உதவுவதற்காக இத்தாலி தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை, இப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டது. மாகாணத்தின் உள்ளூர் மக்களுக்கு உதவுவதற்காக ஒரு பல் தேசிய மாகாண புனர்நிர்மாணக் குழு நிறுவப்பட்டது. அமெரிக்காவானது ஹெரட்டில் ஒரு துணைத் தூதரகத்தை நிறுவியும், ஆப்கானிய பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சியளித்தும், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனை போன்றவற்றைக் கட்டிக் கொடுத்துள்ளது.

நேட்டோவிடமிருந்து பாதுகாப்புப் பொறுப்பை ஏற்ற ஆப்கானிஸ்தானின் முதல் ஏழு பகுதிகளில் ஒன்றாக ஹெராட் உள்ளது. 2011 சூலை 21 அன்று ஆப்கானிய பாதுகாப்பு படைகள் நேட்டோவிடம் இருந்து பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டன.

Remove ads

அரசியல் மற்றும் ஆட்சி

மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக மொஹம்மத் ஆசிஃப் ரஹிமி என்பவர் உள்ளார்.

மாகாணத்தின் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளையும் ஆப்கானிய தேசிய காவல் துறையால் (ஏஎன்பி) கட்டுப்படுத்தப்படுகின்றது. காபூலின் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக காவல் தலைவர் உள்ளார்.

பொருளாதாரம்

ஆப்கானிஸ்தானின் மொத்த குங்குமப்பூ உற்பத்தியில் (2014 இல் 12 மில்லியன் டாலர்) 90% இந்த மாகாணத்தில் நடக்கிறது.[2] குங்குமப்பூ சாகுபடியானது ஹெரட் மாகாண விவசாயிகளின் வருமானத்துக்கு ஒரு நிலையான ஆதாரமாகவும், ஆண், பெண் என இரு பாலருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குவதாகவும், இதனால் அபின் சாகுபடியைச் சார்ந்திருக்கும் நிலை இல்லாததால் அதன் சாகுபடி குறைந்து வருவதாக 2015 ஆம் ஆண்டில் உலக வங்கி குறிப்பிட்டது.

ஈரான் மற்றும் துர்க்மேனிஸ்தானுடனான பன்னாட்டு நில எல்லையில் இந்த மாகாணம் இருப்பதும், அத்துடன் ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையம் மாகாணத்தில் இருப்பதும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்தத்தாக இருக்கிறது.[3] ஹெரட் மாகாணத்தின் கிராமப்புறங்களில் 75 சதவீத மக்கள் வாழ்கின்றனர். மாகாணத்தின் பொருளாதாரத்தில் விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்தவைகள் முதன்மையான இடத்தை வகிக்கின்றன. மாகாணத்தின் உற்பத்திப் பொருட்களில் குங்குமப்பூ, கம்பளங்கள், சீரகம், பளிங்கு, விலங்கு தோல்கள், கம்பளி [4] போன்றவையும் குறிப்பிட்ட இடத்தை வகிக்கின்றன. 2011 ஆண்டு காலகட்டத்தில் மாகாணத்தின் மொத்த உற்பத்தியில் 82% இந்த துறைகளில் இருந்து வந்துள்ளது.

நலவாழ்வு பராமரிப்பு

பாதுகாப்பான குடிநீர் கிடைக்கும் வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையானது 2005 இல் 31% ஆக இருந்த நிலையில் இது 2011 இல் இது 28% ஆக வீழ்ச்சியடைந்தது.[5] 2005 இல் நிகழ்ந்த பிரசவங்களில் 24% பயிற்சியுடைய தாதிகளின் உதவியோடு நிகழ்ந்தது. இது 2011 இல் 25% ஆக உயர்ந்துள்ளது.

கல்வி

ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் (வயது 6+ ) 2005 இல் 36% ஆக இருந்து 2011 இல் 25% என குறைந்துள்ளது. ஹெராத் பல்கலைக்கழகமானது ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய பல்கலைக்கழகமாகும், இதில் 10,000 மாணவர்கள், 14 ஆசிரியர்கள் மற்றும் 45 துறைகள் உள்ளன.

மக்கள்வகைப்பாடு

Thumb
ஹெராத் மாவட்டங்கள்

மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 1,780,000 ஆகும், இவர்களில் பெரும்பான்மையானோர் கிராமப்புறப் பகுதிகளில் வாழ்கின்றனர்.[6] மாகாணத்தில் பாரசீக மொழி பேசும் தாஜிக்ஸ்கள் பெரும்பான்மையினராக உள்ளனர்.[7]

மாவட்டவாரியாக மக்கள் தொகை

இந்த மாகாணமானது 17 மாவட்டங்களையும் 1,000 கிராமங்களையும் உள்ளடக்கி உள்ளது.

மேலதிகத் தகவல்கள் மாவட்டம், தலைநகரம் ...
Remove ads

விளையாட்டு

மாகாணத்தில் கால்பந்து விளையாட்டு பிரபலமான விளையாட்டு ஆகும். அண்மைய ஆண்டுகளில் துடுப்பாட்டம் பிரபலமடைந்து வருகிறது. ஹெரத் மாகாண துடுப்பாட்ட அணியானது உள்ளூர் போட்டிகளில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. ஆப்கானிஸ்தானின் தேசிய விளையாட்டான புஜ்காஷி மற்றும் பல விளையாட்டுகளும் இப்பகுதியில் விளையாடப்படுகின்றன.

எதிர்காலம்

Thumb
ஹெரட் பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஹெரட் மாகாணத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 150 மில்லியன் யூரோ மென்கடன் வசதி உள்ளிட்ட "நீண்ட கால ஒப்பந்தம்" ஒன்று 2012 திசம்பரில், ஆப்கானிஸ்தான் மற்றும் இத்தாலி இடையே கையெழுத்தானது. 2014 ஆம் ஆண்டு 32 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு மென்கடனுக்கான ஒப்பந்தமானது ஹெரட் விமான நிலையத்தின் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் ஹெலட் மற்றும் சிஸ்ட்-இ ஷெரீப் இடையே 155 கி.மீ. சாலை கட்டுமானத்திற்காக ஆப்கானிஸ்தான் மற்றும் இத்தாலி இடையே 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இரண்டாவது மென் கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஈரானின் மஷத் மற்றும் ஹெரத்துக்கு இடையே தொடர்வண்டி இணைப்பை நிறைவேற்ற 70 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மூன்றாவது மென் கடனைப் பெறுவதறுவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆராய இத்தாலி ஒப்புக் கொண்டது. ஆசிய வளர்ச்சி வங்கியானது ஹெரட் மற்றும் துர்க்மேனிஸ்தானுக்கு இடையில் தொடர்வண்டிப் பாதையை நிர்மாணிப்பதற்கான சாத்தியங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டுவருகிறது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads