1700கள்
பத்தாண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
1700கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1700ஆம் ஆண்டு துவங்கி 1709-இல் முடிவடைந்தது.
1700
- சனவரி 1 - மேற்கு ஐரோப்பாவின் சீர்திருத்தத் திருச்சபை (இங்கிலாந்து தவிர்த்து) கிரெகொரியின் நாட்காட்டியைப் பயன்படுத்த ஆரம்பித்தது.
- சனவரி 1 - ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியை பயன்படுத்த ஆரம்பித்தது.
- சனவரி 26 - வட அமெரிக்காவின் வான்கூவர் தீவுக் கரையில் 8.7 முதல் 9.2 ரிக்டர் வரையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தீவின் மேற்குக் கரையில் முழுக்கிராமமும் அழிந்தது. எவரும் உயிர் தப்பவில்லை. இதனால் ஏற்பட்ட ஆழிப்பேரலை சப்பானைத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
- பெப்ரவரி 3 – ஸ்கொட்லாந்தின் எடின்பரோவில் பரவிய தீ நகரின் மத்திய பகுதியை அழித்தது.
- பெப்ரவரி 27 - புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
- மார்ச் 1 - புனித உரோமைப் பேரரசு, டென்மார்க், நோர்வே கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தின
- மார்ச் 1 - சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.
- மார்ச் 25 – பிரான்சு, இங்கிலாந்து, ஒல்லாந்து நாடுகளுக்கிடையே லண்டனில் உடன்பாடு எட்டப்பட்டது.
- ஏப்ரல் - எத்தியோப்பியாவின் தலைநகர் கொண்டாரில் தீ பரவி அரண்மனைகள் உட்படப் பல கட்டடங்கள் அழிந்தன.
- சூலை 11 – கோட்பிரீட் லைப்னிட்ஸ் தலைமையில் புருசிய அறிவியல் கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
- ஆகத்து 18 – சுவீடன், டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளுக்கிடையே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. அதே நாளில் போலந்து மன்னர் இரண்டாம் அகஸ்தசு, உருசியாவின் முதலாம் பீட்டர் ஆகியோர் சுவீடன் மீது போர் தொடுத்தனர்.
- நவம்பர் 15 – பிரான்சின் பதினான்காம் லூயி தனது பேரன் ஐந்தாம் பிலிப்புக்காக எசுப்பானியாவின் மன்னனாக முடி சூடினான்.
- நவம்பர் 20 - சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் நார்வா என்ற இடத்தில் ரஷ்யாவின் முதலாம் பீட்டரைத் தோற்கடித்தான்.
- நவம்பர் 23 – பதினோராம் கிளெமென்ட் 243வது திருத்தந்தையாக முடிசூடினார்.
- நவம்பர் 30 - சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் உருசியப்ப் படைகளை வென்றனர்.
- திசம்பர் 31 - 17 நூற்றாண்டின் கடைசி நாள்.
தேதி அறியாதவை
- சிங்கங்கள் லிபியாவில் அழிந்து மறைந்தன.
Remove ads
பேரரசர்கள்
- பிலிப்பு V, ஸ்பெயின் மன்னன் (1700-1746)
- சத்திரபதி சாகு, மராட்டியப் பேரரசன் (1707-1749)
நபர்கள்
- வள்ளல் சீதக்காதி, (1650-1720)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads