1908 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1908 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக நான்காம் ஒலிம்பியாட்டின் விளையாட்டுப் போட்டிகள் (Games of the IV Olympiad) இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் 1908ஆம் ஆண்டில் நடந்த பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இந்தப் போட்டிகளை முதலில் உரோமை நகரத்தில் நடத்துவதாயிருந்தது; 1906இல் வெசுவியசு எரிமலை வெடிக்கத் தொடங்கியதை அடுத்து ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையால் இது இலண்டனில் நடத்தப்பட வேண்டியதாயிற்று. இது தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் நான்காவது பதிப்பாக குறிக்கப்பட்டது; மாற்று நான்காண்டுகளில் ஏதென்சில் நடத்தப்பட்ட இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுகள் தனியானவை. இந்த ஒலிம்பிக்கின்போது பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தலைவராக பியர் தெ குபர்த்தென் இருந்தார். மொத்தம் 187 நாட்கள், அல்லது 6 மாதங்கள் 4 நாட்கள், நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டிகள் தற்கால ஒலிம்பிக் வரலாற்றில் மிக நீண்ட நாட்கள் நடந்த போட்டிகளாகும்.
Remove ads
பங்குபெற்ற நாடுகள்


1908 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 22 தேசிய ஒலிம்பிக் குழுக்களின் அணிகள் பங்கேற்றன. பின்லாந்து, துருக்கி மற்றும் நியூசிலாந்து (ஆஸ்திரலேசியா அணியின் அங்கமாக) கலந்துகொண்ட முதல் ஒலிம்பிக் போட்டிகளாக இது அமைந்தது. ஐக்கிய இராச்சியம் ஒரே அணியாக பங்கேற்றது சில அயர்லாந்து போட்டியாளர்கள் எதிர்த்தனர். தாங்கள் ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாக இருந்தபோதும் தனி அணியாக போட்டியிட இவர்கள் விரும்பினர். அயர்லாந்து புறக்கணிப்பிற்கு பயந்து ஐக்கிய இராச்சிய அணி என்றில்லாமல் பெரிய பிரித்தானியா/அயர்லாந்து அணி எனப் பெயரை மாற்றினர். மேலும் இரண்டு விளையாட்டுகளில், வளைதடிப் பந்தாட்டம் மற்றும் போலோ, அயர்லாந்து தனிநாடாக பங்கேற்று இரண்டிலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றது.[1]
|
|
சர்ச்சைக்குரியவை
Remove ads
பதக்க எண்ணிக்கை

1908இல் பதக்கங்கள் வென்ற முதல் பத்து நாடுகள்:
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads