2021 மும்பை நிலச்சரிவு

மும்பையில் நிகழ்ந்த தொடர் நிலச்சரிவுகள் From Wikipedia, the free encyclopedia

2021 மும்பை நிலச்சரிவு
Remove ads

2021 முிம்பை நிலச்சரிவு (2021 Mumbai landslide) என்பது 2021 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள் இந்தியாவின் மும்பையில் அமைந்துள்ள புறநகர் சுற்றுப்புறமான செம்பூர் மற்றும் விக்ரோளி ஏற்பட்ட தொடர் நிலச்சரிவாகும்.[4] கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இடிந்து விழுந்த வீடுகளுக்கு அடியில் சிக்கி குறைந்தது முப்பத்திரண்டு பேர் கொல்லப்பட்டனர் [5][6] பிரதமர் நரேந்திர மோடி உயிர்ச்சேதத்திற்கு தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார் மற்றும் இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ₹ 2 லட்சம் [7] மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்தார்.[8]

விரைவான உண்மைகள் நாள், அமைவிடம் ...

பிரிஹன் பெருநகரமும்பை மாநகராட்சி மஹூல் மற்றும்செம்பூர் நிலச்சரிவுப் பகுதிகளைச் சுற்றியுள்ள கிட்டத்தட்ட 120 பேரை அருகில் உள்ள பெருநகர மும்பை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டதை உறுதிப்படுத்தியது.

Remove ads

பின்னணி

சூன் 10, 2021 அன்று, மும்பையின் வடக்கு புறநகர்ப் பகுதியான மலாட்டில், கனமழை மற்றும் வெள்ளத்தின் மத்தியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது பன்னிரண்டு பேர் கொல்லப்பட்டனர்.[9] செப்டம்பர் 2020 இல், மும்பை அருகே தானே மாவட்டத்தின் பிவாண்டியில், பருவமழையின் போது மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 29 ஆண்டுகளில் நிலச்சரிவு சம்பவங்களால் 290 பேர் உயிரிழந்துள்ளதோடு 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது நகரத்தில் நிலச்சரிவுகள் ஒரு பெரிய கொலையாளி என்று டெக்கான் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.[10]

மும்பை பெருநகர மாநகராட்சியின் தரவுகள் மும்பை முழுவதும் 291 நிலச்சரிவு அபாயப் பகுதிகள் இருப்பதைக் காட்டுகின்றன. அவற்றில் 50% க்கும் அதிகமானவை எஸ் வார்டில் உள்ளன, இதில் பாண்டுப் மற்றும் விக்ரோளி பகுதிகளும் அடங்கும்.

Remove ads

துயர நிகழ்வின் பின்விளைவுகள்

இந்த நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்ததாக மும்பை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது.[11]

பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் ₹ 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ₹ 50,000 இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் ஐந்து இலட்சம் இழப்பீடு வழங்குவதாகவும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.[12]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads