அக்காந்தோடியை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அக்காந்தோடியை (Acanthodii) என்பது விலங்கியல் வகைப்பாட்டின்படி, காலத்தால் அழிந்த மீன்வகுப்பு ஒன்றைக் குறிக்கிறது. இவைகளுக்கு முட்சுறாக்கள் என்ற பெயர் இருந்தாலும், உண்மையில் இவை சுறாக்களிடமிருந்து மிகவும் வேறுபடுகின்றன. இவை குருத்தெலும்பு மீன்களின் தன்மையையும், எலும்புமீன்களின் தன்மையையும் கலந்த ஒரு மீனினமாகும். இவை பாறையடுக்குகளில் கற்படிவங்களாகப் (fossil) புதைந்து கிடக்கும், மிகப்பெரிய பழங்கால மீன் வகையாக அறியப்படுகிறது. இதுவரையில் அறிந்திருக்கும் மீன்களிலெல்லாம் விட, இவை காலத்தால் முந்தினவையாகக் கருதப்படுகிறது. பெரும்பான்மையான அகழ்வாராய்ச்சியாளர்கள், இவைகள் எலும்பு மீன்களை மிகவும் ஒத்திருப்பதாகக் கூறுகின்றனர்.
Remove ads
சொற்பிறப்பு
இலத்தீன் சொல்லான அக்கந்தோடுசு(இலத்தீன்:acanthodes) என்பதற்கு முள்,முதுகெலும்பு என்ற பொருள் வருகிறது. இந்த இலத்தீனிய சொல், விலங்கியல் வகைப்பாட்டியலில், இவ்வகுப்பின் பேரினங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. இங்கு இந்த இலத்தீனிய சொல்லில் இருந்து, அக்கந்தோடியன்(இலத்தீன்:acanthodian) என்ற ஒருமைக்கானப் பெயர் உருவாக்கப்பட்டது. அதன் பன்மைச்சொல்லே, அக்கந்தோடியை (இலத்தீன்:Acanthodii) ஆகும்.
காலம்
இவற்றில் பல இனங்கள் காணப்படுகின்றன. இவை சுகாட்லாந்தில் கெய்த்னெசு, போர்பார் என்னும் இடங்களில் அகப்படும் பழைய செம்மணற்பாறை(Old red sand stone)யில் அகப்படுகின்றன. இப்பாறைகள் டெவோனியன் காலத்தைச சேர்ந்தவை ஆகும். அதாவது முப்பது கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் ஆகும். அக்காலத்தில், இவை செழித்திருந்ததாக, ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வருகின்றன. அது முதல் பத்து கோடி ஆண்டு கரிக்காலத்தின் பகுதியாகிய, கீழ்ப்பெர்மியன் காலம் வரையில் இவை வாழ்ந்து வந்திருக்கின்றன. இவை சிறுமீன்கள் ஆகும். இம்மீன்கள் தொடக்ககாலத்தில் கடல்நீரிலும், பிற்காலத்தில் நன்னீரிலும் தன் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டவை ஆகும்
Remove ads
உடலமைப்பு
இவற்றின் தோல், சுறாவின் தோல் போல் சொரசொரப்பாக உள்ளது. அதற்குக் காரணம், அதிலுள்ள முள் போன்ற சிறு செதில்கள் ஆகும். இவற்றின் கண்களைச் சுற்றிலும், சிறு தகடுகளால் ஆன வளையம் ஒன்று அமைந்திருக்கிறது. இந்த மீன்களில், சாதாரண மீன்களுக்கு இருப்பது போல, முன் ஒரு இணைத்துடுப்பும், பின் ஒருஇணைத்துடுப்பும் இருக்கின்றன. மேலும் இவற்றிற்கு இடையே வரிசையாக இணை,இணைகளாக வேறு துடுப்புகளும் இருக்கின்றன. இப்படி இந்த மீன்களில் முன், பின் துடுப்புக்களுக்கு இடையேயும், துடுப்புகள் இருப்பதைக் கவனித்தால், மீனகளுக்கு இரண்டு பக்கங்களிலும் தொடர்ச்சியான ஒரு துடுப்பு முதலில் இருந்தது, அது பல துடுப்புக்களாகப் பிரிந்தது. அவற்றில் இப்போது, தோள்துடுப்பும், தொடைத்துடுப்பும் மட்டும் எஞ்சி இருக்கின்றன என்னும் கருத்தேத் தோன்றுகின்றது. அக்காந்தோடியையின் ஒவ்வொரு துடுப்பின் முன்பும், ஒரு வலுவான முள் உண்டு.
பரிணாமவகைப்பாட்டுத் தோற்றநெறி
தாடையுள்ள முதுகெலும்பிகளுக்கிடையேயான தொடர்புகள் பற்றிய அறிவு, (Davis et al. (2012)) இவ்வகுப்பு, இருபெரும் உயிரின கிளைகளை உருவாக்குகிறது. ஒன்று (clades) எலும்பு மீன்கள்(Osteichthyes), மற்றொன்று குருத்தெலும்பு மீன்கள் (cartilaginous fish). முன்னர் குருத்தெலும்பு மீன்களுடைய தன்மைகளை அதிகம் பெற்றிருந்தாலும், எலும்பு மீன்களிடையே வகைப்பாட்டில் வைக்கப்பட்டது. கீழுள்ள உயிரினகிளை வரைபடம்(cladogram), இவ்வகுப்பின் பரிணாம வளர்ச்சியைக் குறிக்கிறது.:[2]
உயிரினகிளை வரைபடம்
கீழே குறிப்பிடப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும், விலங்கியல் வகைப்பாட்டுப் பெயர்கள் ஆகும். பொருத்தமான கட்டுரைகள் உருவாக்கப்பட்ட பின்பு, அக்கட்டுரைகளைப் பொருத்தலாம். (எ.கா) Vertebrata--->முதுகெலும்பிகள். தடிமனான கிளைகளைக் கொண்டவை, அக்காந்தோடியை வகுப்பின் பரிணாம உயிரினகிளையாகும்.
|
Placodermi
அக்காந்தோடியை
அக்காந்தோடியை |
Remove ads
ஊடகங்கள்
- சுகாட்லாந்து
- செம்மணற்பாறை
- செம்மணற்பாறை
- Diplacanthus longispinus
- Mesacanthus pusillus
Parexus falcatus
Ishnacanthus gracilis
அடிக்குறிப்புகள்
மேலும் கற்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads