அசோக ரன்வல
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அசோக ரன்வல (Ashoka Ranwala)[1] இலங்கை அரசியல்வாதியும், தொழிற்சங்கவாதியும் ஆவார். இவர் 2024 நவம்பர் 21 இல் நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்பட்டார், ஆனாலும் 22 நாட்களில் பதவியில் இருந்து விலகினார்.[2] இவர் இளவயதிலேயே மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதன் கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[3][4]
Remove ads
அரசியலில்
தொழிற்சங்கப் பணிகள்
ரன்வல இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் சப்புகசுகந்தை சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றினார். 1989 இல் 1987-89 ஜேவிபி புரட்சியின் போது, யப்பான் சென்று 1994 இல் நாடு திரும்பினார்.[சான்று தேவை] மக்கள் விடுதலை முன்னணியின் பொது ஊழியர் சங்கத்தில் இணைந்து, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.[5] 2023 மார்ச்சில் கட்டாய ஓய்விற்கு செல்லுவதற்கு முன்னர் இவர் இலங்கை பெட்ரோலியப் பொது ஊழியர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.[6]
உள்ளாட்சி மாகாணசபை அரசுகள்
2000 முதல் 2004 வரை ரன்வல பியகமை பிரதேச சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2004 முதல் 2009 வரையும், பின்னர் 2014 முதல் 2019 வரையும் மேல் மாகாண சபை உறுப்பினராக இருந்தார். மேல் மாகாண சபை உறுப்பினராக இருந்தபோது, சபுகஸ்கந்தை காவல்துறைக் குற்றப் பொறுப்பதிகாரியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் 2018 சனவரியில் இவர் கைது செய்யப்பட்டார்.[7]
நாடாளுமன்றம்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதன் கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[3][4]
Remove ads
கல்வித்தகைமை குறித்த சர்ச்சையும் பதவி விலகலும்
அசோக ரன்வல தனது தொடக்கக் கல்வியை யட்டியான தொடக்கப் பாடசாலையிலும், ஹெனிகம மத்திய கல்லூரியிலும் கற்றார்.
2024 திசம்பரில், இலங்கை தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகர் கூறியபடி அவருக்குப் உயர்கல்விப் பட்டம் இருப்பதை நிரூபிக்குமாறு ரன்வலவுக்கு சவால் விடுத்தார். தேசப்பிரிய, சபாநாயகர் தனது கல்வித் தகுதியை நிரூபிக்கத் தவறினால் பதவி விலக வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால், ஆளும் தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.[8] ரன்வல ஒரு பொது அறிக்கையில் தனது உயர்கல்வித் தகுதிகளில் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், சப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் அடங்கும் என்று கூறி விமர்சனத்தை நிராகரித்தார்.[9]
இலங்கை நாடாளுமன்ற அதிகாரபூர்வ இணையத்தளம் "கலாநிதி" பட்டத்தை நீக்கியுள்ளதாக நியூசுவயர் செய்தி வெளியிட்டது. இணையத்தளத்தின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகளின் அடிப்படையில், 24 மணி நேரத்திற்குள் திருத்தம் நிகழ்ந்ததாக சுயாதீன ஆய்வாளர் கலாநிதி சஞ்சனா ஹட்டொடுவா உறுதிப்படுத்தினார்.[10] ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்ட போது, அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிச, "அதிகாரபூர்வ பதிவுகளை சரிபார்க்கப்பட்ட சான்றிதழ்களுடன் சீரமைப்பதற்கான ஒரு நிர்வாகத் தீர்மானமே தலைப்பை நீக்கியதாக" குறிப்பிட்டார். இருப்பினும், கலாநிதிப் பட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்து அவர் தெளிவுபடுத்தவில்லை.[11]
இந்த சர்ச்சை பல எதிர்க்கட்சிகளின் கவனத்தை ஈர்த்தது, அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளால் கோரப்படும் கல்வி, கௌரவப் பட்டங்கள் குறித்து அதிக வெளிப்படைத்தன்மைக்கு அழைப்பு விடுத்தனர். முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர இருப்பதாகத் தெரிவித்தது.[12]
ரன்வலவின் கல்வித் தகுதிகள் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், 22 நாட்களே பதவி வகித்த நிலையில், 2024 திசம்பர் 13 அன்று நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவியைத் துறப்பதாக அறிவித்தார்.[13][14]
Remove ads
தேர்தல் வரலாறு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads