அப்பன்திருப்பதி சீனிவாச பெருமாள் கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அப்பன்திருப்பதி சீனிவாச பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் அப்பன்திருப்பதி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1] ஆண்டுதோறும் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறும் போது, அழகர் கோயிலிலிருந்து கள்ளழகர் மதுரை விசயம் செய்யும் போது, இக்கோயிலின் மண்டபத்தில் ஓர் இரவு தங்கிச் செல்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.

விரைவான உண்மைகள் அப்பன்திருப்பதி சீனிவாச பெருமாள் கோயில், ஆள்கூறுகள்: ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 204 மீட்டர் உயரத்தில், 10.0195°N 78.1925°E / 10.0195; 78.1925 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, அப்பன்திருப்பதி சீனிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் மூலவர் சீனிவாச பெருமாள்; தாயார் அலர்மேல்வள்ளி ஆவர். கருடாழ்வார், அனுமன், சக்கரத்தாழ்வார், விச்வக்சேனர், நம்மாழ்வார், இராமர், இராமானுசர் மற்றும் மணவாள மாமுனிகள் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[2]

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.[3]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads