ஆக்‌ஷன்

2019 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

ஆக்‌ஷன்
Remove ads

ஆக்‌ஷன் (Action) என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும்.[1] சுந்தர் சி. இயக்கிய இப்படத்தை ஆர். ரவீந்திரன் தனது டிரைடென்ட் ஆர்ட்ஸ் பதாகையின் கீழ் தயாரித்ததுள்ளார். இந்த படத்தில் விஷால், தமன்னா ஆகியோர் உளவுத்துறை அதிகாரிகளாக இணைந்து பயங்கரவாதியை வேட்டையாடும் ஒரு உலகளாவிய பணியைத் தொடங்குகின்றனர். இந்த படத்தில் அகன்க்ஷா பூரி, ஐஸ்வர்யா இலட்சுமி (அவரது தமிழ் திரைப்பட அறிமுகம்), ராம்கி, சாயா சிங், யோகி பாபு, கபீர் துஹான் சிங் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர் . இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சுந்தர் சி. ஒரு சிறிய காட்சியில் தோன்றுகிறார்.[2][3]

விரைவான உண்மைகள் ஆக்‌ஷன், இயக்கம் ...

ஆக்‌ஷன் படமானது 2019 நவம்பர் 15 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. சில அதிரடி காட்சிகள் மற்றும் மரணதண்டனை குறித்த விமர்சனங்களுக்காக பாராட்டுக்களைப் பெற்றது,[4] இது வணிக ரீதியான தோல்வி படமாகும். அதே நேரத்தில் இதன் இந்தி மொழிமாற்று பதிப்பு யூடியூபில் வெற்றி பெற்றது.[5]

Remove ads

கதைச் சுருக்கம்

ஒரு பயங்கரவாதியைக் கண்காணிக்க இந்திய இராணுவத்தால் அனுப்பப்பட்ட ஒரு அதிகாரி, தனது சொந்த நாட்டில் இரகசிய உளவாளிகளை கண்டறியும்போது அவரது பணி சிக்கலக மாறுகிறது.

நடிப்பு

  • விஷால் கர்னல்.சுபாஷ், இந்திய ராணுவ புலனாய்வு அதிகாரி, மற்றும் சரவணனின் தம்பி
  • தமன்னா (நடிகை) லெப். தியா சுபாசுடன் பணியாற்றுபவர்
  • அகன்சா பூரி கைரா, பணத்திற்காக மக்களை கொல்லும் படத்தின் முக்கிய எதிரி. (பின்னணி குரலை சாக்‌ஷி அகர்வால் கொடுத்துள்ளார்)
  • ஐஸ்வர்யா இலட்சுமி மீரா, சுபாஷின் வருங்கால மனைவி மற்றும் கயல்விழியின் தங்கை
  • ராம்கி (நடிகர்) சரவணன், சுபாஷின் அண்ணன் மற்றும் துணை முதல்வர்
  • சாயா சிங் கயல்விழி, சரவணனின் மனைவி, மீராவின் அக்காள், சுபாசின் அண்ணி
  • ஆரவ் சவுத்ரி பாகிஸ்தானில் உள்ள இந்திய உளவாளி இம்ரான்
  • சாயாஜி சிண்டே லெப். ஜெனரல் ரெஹ்மான், சுபாஷின் உயரதிகாரி
  • கபீர் துகான் சிங் சையத் இப்ராகிம் மாலிக் [மாலிக்], பாகிஸ்தானில் ஒளிந்திருக்கும் உலகளாவிய பயங்கரவாதி
  • ஷா ரா மாயக்கண்ணன், சுபாஷின் மைத்துனர் மற்றும் இந்தியத் தூதரகத்திற்காக துருக்கியில் பணிபுரியும் கல்லூரி தோழர்
  • யோகி பாபு ஜாக், ஓர் இந்திய ஹேக்கர்
  • ராஜஸ்ரீ வாரியர் சுபாஷின் சகோதரி மற்றும் மாயக் கண்ணனின் மனைவி
  • பழ. கருப்பையா முதல்வரும், சுபாஷின் தந்தையும்
  • வின்சென்ட் அசோகன் தீபக் மேத்தா, சரவணனின் நண்பர்
  • பரத் ரெட்டி காவல் துறை அதிகாரியும், சுபாஷின் நண்பரும்
  • அஸ்வந்த் அசோக்குமார் கயல்விழியின் மகன் அஷ்வந்த்
  • யூரி சூரி தாஹிர் இக்பால், பாகிஸ்தான் ராணுவ தளபதி மாலிக் வீட்டு பாதுகாப்புக்கு தலைமை தாங்குகிறவர்
  • ரவி வெங்கட்ராமன் காவல் ஆணையர்
  • சுந்தர் சி. பயணியாக சிறப்புத் தோற்றத்தில்
Remove ads

இசை

இப்படத்திற்கான இசையை ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை பா. விஜய், ஹிப்ஹாப் தமிழா, அறிவு, பால் பி சைலஸ், நவ்ஸ் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்த படத்தின் இசைத் தொகுப்பானது ஐந்து பாடல்களைக் கொண்டுள்ளது. மேலும் அவை அனைத்தும் தனிப்பாடல்களாகவும் வெளியிடப்பட்டன. 2019 அக்டோபர் 30 அன்று பாடல் தொகுப்பு வெளியிடப்பட்டது. இதன் தெலுங்கு பதிப்பு 2019 நவம்பர் முதல் நாளன்று வெளியிடப்பட்டது.

பாடலின் அசல் பதிப்பை ஹிப்ஹாப் ஆதி மற்றும் பால் பி சைலஸ் ஆகியோர் பாடினர்.[6]

மேலதிகத் தகவல்கள் தமிழ் பாடல்கள், # ...

வெளியீடு

படத்தின் அதிகாரப்பூர்வ தூண்டோட்டம் 2019 செப்டம்பர் 13 அன்று வெளியிடப்பட்டது,[7] தொடர்ந்து முன்னோட்டமானது 2019 அக்டோபர் 27 அன்று வெளியிடப்பட்டது.[8] இந்த படம் இந்தியாவில் 2019 நவம்பர் 15 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

வீட்டு ஊடகம்

படத்தின் செயற்கைக் கோள் உரிமைகள் விஜய் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டது. அமேசான் பிரைம் வீடியோவில் 2019 திசம்பர் 16 முதல் ஆக்சன் வெளியானது. படம் 2020 நவம்பர் 4 அன்று ஜப்பானில் குறுவட்டில் வெளியிடப்பட்டது.[9]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads