ஆதமங்கலம் புதூர்

From Wikipedia, the free encyclopedia

ஆதமங்கலம் புதூர்map
Remove ads

ஆதமங்கலம் புதூர் (ஆங்கிலம்:Adamangalam pudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் ( முன்பு : போளூர் வட்டம்) உள்ள ஒரு நகரியம் ஆகும்.

விரைவான உண்மைகள்
Remove ads

நகரியத்திற்குட்பட்ட ஊர்கள் (அ) பகுதிகள்

  • ஊர் = ஆதமங்கலம் புதூர்

பகுதிகள் = பஜார் , கோவில் தெரு ,

ஏரித்தெரு, பாடசாலை தெரு

  • ஊர் = வெங்கிட்டம்பாளையம்

பகுதிகள் = பாளையம்(ஊர்) , கோட்டை ,

  • ஊர் = கேட்டவரம்பாளையம்

பகுதிகள் = பெரிய பாளையம் , சின்ன பாளையம் ,

மக்கள் தொகை

இந்த ஊரில் ஏறத்தாழ 19,000 மக்கள் வாழ்கிறார்கள் . இதில் ஆதமங்கலம் புதூரின் மக்கள் தொகை 8,000 ஆகும். கேட்டவரம் பாளையத்தில் 6,000 மக்கள் , வெங்கிட்டம்பாளையத்தில் 5,000 மக்கள் இருக்கிறார்கள் .அனைத்து பகுதிகளிலும் அகமுடையார் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

சிறப்பு

மாடு விடு திருவிழா

வடமாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மாடுவிடு திருவிழா , ஆதமங்கலம் புதூரில் சிறப்புப் பெற்றது ஆகும். பொங்கல் பண்டிகையின் போது நடக்கும் இத்திருவிழா 10 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும்.இது அங்கு பெரும்பான்மையாக உள்ள அகமுடையார் சமுதாய மக்களால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

குருவட்டம்

ஆதமங்கலம் புதூர் வருவாய் குருவட்டடின் தலைமையகம் ஆதமங்கலம் புதூரே ஆகும் . மேலும் புகழ் பெற்ற பர்வத மலைக்குப் பின்புறம் தான் இந்த நகரம் உள்ளது .

குருபூசை:

இங்கு பெரும்பான்மையாக உள்ள அகமுடையார் சமுதாய மக்கள் மற்றும் இளைஞர்களால் வருடந்தோறும் அக்டோபர் 27 ல் முதல் சுதந்திர போராட்ட கிளர்ச்சிக்கு காரணமான மாமன்னர் மருதுபாண்டியர்கள் மற்றும் சென்னை பச்சையப்பன் கல்லூரி நிறுவி,பல கோவில் அறப்பணிகளுக்கு வித்திட்ட பச்சையப்ப முதலியார் ஆகியோரின் குருபூசை விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாட படுகிறது.

கோவில்

பஜாரில் உள்ள அம்மன் கோவில் பெரியது . கொடி மரம் , ராஜ கோபுரம் ஆகியவற்றுடன் கூடிய தலம் ஆதமங்கலம் ஆகும் . மேலும் , ஆதமங்கலம் புதூரில் ராமர் கோவில் அமைந்துள்ளது,(ஆதமங்கலம் புதூர் வெற்றிலைக் காரஅகமுடையார் வகையறாக்கு பாத்தியப்பட்டது. ) பெரியபாளையத்தில் உள்ள ராமர் கோவிலும் பழமையானது .

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads