ஆந்திரிக்சு கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆந்திரிக்சு கழகம் (Antrix Corporation) இந்திய விண்வெளித் துறையின் வணிகப் பிரிவாகும். இது 1992- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய விண்வெளிதுறையின் சேவைகளை சந்தைப் படுத்துவது இக்கழகத்தின் பணியாகும்.[2]. விண்வெளித் துறையின் தலைவரே இதன் தலைவர் ஆவார்.

விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், சிறு நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.

Remove ads

விருதுகள்

  • இசுடாக்கோம், சுவீடனில் அமைந்துள்ள பூகோள மன்றம் என்ற அமைப்பினால் வழங்கப்படும் பூகோள ஓம்புதல் ஆராய்ச்சி விருது 2010-ஐ ஆந்திரிக்சு கழகம் பெற்றது.[3]
  • பாசுக்கரா குழுமம் மற்றும் சிஎன்பிசி ஆவாசு என்ற நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு அளிக்கும் இந்தியாவின் பெருமை என்ற விருதினை வானில் இருந்து படம் எடுத்து இந்தியாவிற்கு சேவை புரிந்ததற்காக 9 ஆகத்து, 2009 அன்று ப. சிதம்பரத்தால் வழங்கப்பட்டது.
  • 2008ம் ஆண்டு இதற்கு மினிரத்னா தகுதி உயர்வு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது
Remove ads

சர்ச்சைகள்

28, சனவரி,2005ம் ஆண்டு இந்திய விண்வெளித்துறை மற்றும் இந்திய நாட்டின் பாதுகாப்பு பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 150 மெகாகெட்சு அலைக்கற்றைகளின் ஒரு பகுதியை 70 மெகா கெட்சு அளவிற்கு தனியார் நிறுவனமான தேவாசு மல்டிமீடியா , பெங்களூரு என்ற நிறுவனத்தின் பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு 2,00,000ம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.[2][3]. இந்த ஒப்பந்தம் இந்திய பிரதமருக்கோ, அல்லது மத்திய அமைச்சரவைக்குழுவிற்கோ தெரியாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அலைக்கற்றைகளை ஒதுக்கும் ஒப்பந்தங்கள் மற்றும் உரையாடல்கள் நிகழும் போது திரு மாதவன் நாயர் இந்திய வின்வெளித்துறையின் தலைவர், ஆந்திரிக்சு தலைவர், வின்வெளித்துனை குழமம் மற்றும் தலைமை செயலர், வினவெளித்துறை ஆகிய பதவிகளை வகித்தார். தற்போது இந்த ஒப்பந்தத்தை பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.[4] சனவரி 25, 2012 அன்று எந்த அரசுத்துறை பணிகளிலும் பொறுப்பேற்க மாதவன் நாயர் உட்பட நான்கு அறிவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.[5]

Remove ads

ஒப்பந்தம்

இந்நிறுவனத்துடன் ஐக்கிய இராச்சியம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் தங்களுடைய செயற்கைக் கோள்களை ஏவித்தருமாறு வணிக ஒப்பந்தங்களைச் செய்துள்ளன.[6] இந்நிறுவனத்துடன் கனடா தனது M3M (Maritime Monitoring and Messaging Micro - Satellite) எனும் செயற்கைக்கோளை ஏவுவதற்கு ஒப்பந்தம் செய்யவுள்ளது.[7]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads