ஆலாம் இம்பியான்
சா ஆலாம் மாநகர்ப் பகுதியில் ஒரு நகரியம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆலாம் இம்பியான், (மலாய்; ஆங்கிலம்: Alam Impian; சீனம்: 梦境) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின், சா ஆலாம் மாநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நகரியம் ஆகும். தாமான் செரி மூடா அருகே அமைந்துள்ள இந்த நகரியம் சா ஆலாம் பிரிவு 25 என்றும் அழைக்கப்படுகிறது.
சா ஆலாம் மாவட்டத்தில் ஒரு முக்கியமான இடத்தில் அமைந்துள்ள இந்த நகரியம் 1,235 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது; மற்றும் சா ஆலாம் நகர மையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த நகரியம் இரட்டை மாடி ஓரடுக்கு மனைகள் மற்றும் பிரிக்கப்பட்ட அரைமாடி மனைகளைக் கொண்டுள்ளது.[2]
Remove ads
பொது
இந்த நகர்ப்பகுதி நவம்பர் 2006-இல், எஸ்பி கட்டுமானக் குழுமத்தின் (SP Setia) கீழ் தொடங்கப்பட்டது.[3] சுவரெழுத்துகளைக் கொண்ட சுவர்கள், ஒரு கலைக்கூடம், நேரியல் பூங்காக்கள், ஒரு திறந்தவெளி அரங்கம், தெரு ஓவியம், 31 ஏக்கர் (13 எக்டேர்) பரப்பளவில் ஒரு மைய நகரத்தையும் இந்த நகரியம் கொண்டுள்ளது.[4][5]
போக்குவரத்து
ஆலாம் இம்பியான் நகர்ப்பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலைகள்; மற்றும் விரைவுச்சாலைகள்:
கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை (FH2)
சா ஆலாம் விரைவுச்சாலை (KESAS) 506
மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (ELITE)
கெமுனிங்-சா ஆலாம் விரைவுச்சாலை (LKSA)
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

