ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் புறநகர்ப் பகுதியில் உள்ள எல்ஆர்டி நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Alam Sutera LRT Station; மலாய்: Stesen LRT Alam Sutera; சீனம்: 阿南苏特拉轻轨站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.[2]
இந்த நிலையம் கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் புறநகர்ப் பகுதியில் உள்ளது. கோலாலம்பூரில் இருந்து தெற்கே 21 கி.மீ. தொலைவில், பண்டார் கின்ராரா, ஆலாம் சுத்திரா (Alam Sutera) அடுக்குமாடி வீடுகளில் இருந்து 500 மீட்டர் நடை தூரத்தில் உள்ளது.[3]
Remove ads
பொது
இந்த நிலையம் பல குடியிருப்புப் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. பண்டார் கின்ராரா 1 (Bandar Kinrara 1); பண்டார் கின்ராரா 9 (Bandar Kinrara 9), புஞ்சாக் ஜாலில் (Puncak Jalil) போன்ற அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிகள் இந்த நிலையத்திற்கு அருகில் உள்ளன.
கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும்.
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 15 கி.மீ. தொலைவிற்கு 7 நிலையங்கள் கட்டப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது. இந்த நிலையத்தில் திறந்தவெளி வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன.
அமைவு
இந்த நிலையத்திற்கு முன்னதாக SP22 கின்ராரா பிகே5 எல்ஆர்டி நிலையமும்; பின்னதாக SP20 முகிபா எல்ஆர்டி நிலையமும் உள்ளன.
Remove ads
பேருந்து சேவைகள்
Remove ads
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
அமைப்பு
L1 | ||
பக்க நடைமேடை | ||
நடைமேடை 1 | செரி பெட்டாலிங் >>> AG1 SP1 செந்தூல் தீமோர் எல்ஆர்டி; AG18 அம்பாங் எல்ஆர்டி (→) AG11 SP11 சான் சோவ் லின் (→) | |
நடைமேடை 2 | செரி பெட்டாலிங் >>> SP31 புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி (←) | |
பக்க நடைமேடை | ||
தரை | தரைநிலை | கட்டணங்கள், பயணச்சீட்டு இயந்திரங்கள், நிலையக் கட்டுப்பாடு,(→) கம்போங் முகிபா |
G | தெருநிலை | ஊனமுற்றோருக்கான நட்பு பாதை; இருபுறமும் தெரு நுழைவாயில்கள் |
Remove ads
காட்சியகம்
ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2022)
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads