இசக்கார்

From Wikipedia, the free encyclopedia

இசக்கார்
Remove ads

இசக்கார் (Issachar; எபிரேயம்: יִשָּׂשכָר, தற்கால Yissakhar திபேரியம் Yiśśāḵār ; "reward; recompense") என்பவர் தொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, யாக்கோபுவினதும் லேயாவினதும் (லேயாவின் ஐந்தாவது மகனும் யூக்கோபுவின் ஒன்பதாவது மகனும்) ஆவார். இவர் இசுரயேலிய இசக்கார் கோத்திரத்தின் தந்தையாவார். ஆயினும், சில விவிலிய ஆய்வாளர்கள் பின் சொல் நடையாக, பிற இசுரேலிய குலத்தின் கூட்டாக இக்குலத்தைப் பார்க்கின்றனர்.[1] தோரா இசக்கார் எனும் சொல்லுக்கு இரு வேறுபட்ட சொற்பிறப்பியல்களைத் தருகின்றது. விவிலிய ஆய்வாளர்கள் யாவே பாரம்பரியம், எலோகிம் பாரம்பரியம் மூலம் இவ்வேறுபாட்டை விளக்குகின்றனர்.[2] யாவே பாரம்பரியத்தின்படி, இஸ் சகர் என்பதிலிருந்து "வாடகை மனிதன்" என்ற அர்த்தத்துடன் இச்சொல் உருவானது. ஏனென்றால், லேயா யாக்கோபுவை மயக்க மருந்துச் செடிக்காக பாலியல் விருப்பம் கொள்ளச் செய்தாள்.[3] எலோகிம் பாரம்பரியத்தின்படி, "யெஸ் சகர்" என்பதிலிருந்து "பரிசு" என்ற அர்த்தத்துடன் இச்சொல் உருவானது. ஏனென்றால், லேயா தன்னுடைய பணிப்பெண்னை (சில்பா) யாக்கோபுடன் கூடியிருக்கக் கொடுத்ததால் கிடைத்த பரிசு என நினைத்தாள்.[4]

Thumb
இசக்கார் எனும் பெயர்.
Remove ads

குடும்ப மரம்

தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[5]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads