ஆகார்

எபிரேய விவிலியத்தில் உள்ள ஒரு பெண் From Wikipedia, the free encyclopedia

ஆகார்
Remove ads

ஆகார் அல்லது ஹாஜர் (அலை) (இசுலாமிய பார்வையில்) [a] (ஆங்கிலம்: Hagar) (அரபி: هَاجَر) என்பவர் எகிப்திய பெண்[2] மற்றும் இஸ்ரயேல் மக்களின் முதுபெரும் தந்தையர்களில் மூவரில் முதலாமானவரான ஆபிரகாமின் இரண்டாவது மனைவியும்,[3] இஸ்மவேலியர்களின் மூதாதையராகக் கருதப்படும் இசுமவேலின் தாயும் ஆவார். .[4] மேலும் இவரைப் பற்றி பழைய ஏற்பாடு மற்றும் திருக்குர்ஆன் ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் ஆகார்Hagar, எகிப்தியப் பெண், குடும்பத் தலைவி, முதல் முதுபெரும் தாய், இசுமாயில் மக்களின் முதுபெரும் தாய், அரேபியர்களின் தாய். ...
Remove ads

வாழ்க்கைச் சுருக்கம்

ஆகாரின் வாழ்க்கைக் குறிப்புகள் யூத புனித நூலான டனாக் மற்றும் கிறிஸ்தவ புனித நூலான விவிலியத்தின் தொடக்க நூல் அதிகாரம் 16, 21 மற்றும் 25 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவிலியத்தின் பழைய ஏற்பாடு மற்றும் திருக்குர்ஆன்னிலும் கூறப்பட்டுள்ளபடி, ஆகார் ஆபிராமின் மனைவி சாராளுக்கு மகப்பேறு இல்லாததால் தனது எகிப்திய பணிப்பெண்ணான ஆகாரைத் ஆபிராமுக்கு மனைவியாகக் கொடுத்தார். அவர் ஆகாருடன் உறவு கொண்டபின் அவள் கருவுற்றாள். தேவத் தூதனானவர் ஆகாரை நோக்கி, உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன். அது பெருகி எண்ணி முடியாததாயிருக்கும் என்றார். பின்னும் தேவதூதனானவர் அவளை நோக்கி நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், நீ ஒரு குமாரனைப் பெறுவாய். அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக என அறிவித்தார். அதே போல் ஆகார் தனது எண்பத்தாறாவது வயதில் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுத்தாள். தேவதூதர் முன் அறிவித்தபடியே, ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் இசுமவேல் என்று பெயரிட்டார். சில காலத்துக்குப் பின்பு ஆகாரின் மகன் இசுமவேல், சாராளின் மகனான ஈசாக்கை பரியாசம் பண்ணுகின்றதைக் கண்ட சாராள், ஆபிரகாமிடம் இந்த அடிமைப் பெண்ணின் மகன் இசுமவேல் என் குமாரனாகிய ஈசாக்கோடே இனக்கமாகயிருப்பதில்லை, இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் இங்கேயிருந்து துரத்திவிடும் என்றாள். மேலும் ஆபிரகாம் தன் மகன்களைக் குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது. அப்பொழுது கடவுள் ஆபிரகாமை நோக்கி, ஆகாரின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் மிகப்பெரும் சாதியாக்குவேன் என்றார். மறுநாள் அதிகாலையில் ஆபிரகாம் எழுந்து, உண்ண உணவும் ஒரு துருத்தியில் தண்ணீரையும் எடுத்து, ஆகார் மற்றும் மகன் இசுமவேலிடம் கொடுத்து அங்கிருந்து அனுப்பிவிட்டான். அவள் புறப்பட்டுப்போய், பீர்சேபா என்னும் வனாந்திரத்திர்க்குச் சென்றால். அந்த பாலைவனத்தில் தண்ணீர் பற்றாக்குறையால், தாய் மற்றும் மகன் இருவரும் மிகுந்த தாகத்திற்க்கு உள்ளானார்கள். இதனால், ஆகார் தனது மகனுக்காக தண்ணீரைத் தேடி சஃபா மற்றும் மர்வா மலைகளுக்கு இடையே ஓடினார். பிறகு அங்கு ஒரு தேவதூதன் அவள் முன் தோன்றினார். அவர் அவளுக்கு உதவினார் மற்றும் கடவுள் இஸ்மவேலின் அழுகையைக் கேட்டதாகவும், அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதாகவும் கூறினார். அந்த நேரத்தில், கடவுள் தரையில் இருந்து ஒரு நீரூற்றை உண்டாக்கினார், இதுவே தற்போது சம் சம் கிணறு என்று இசுலாமியர்கள் நம்புகின்றனர். இன்று வரையிலும் மக்கா முழுவதும் ஒரு நாளைக்கு முப்பது இலட்சம் பேரின் தண்ணீர் தாகம் தீர்க்கும் நீர்நிலையாக உள்ளது.[5] பின்பு ஆகாரும் இசுமவேலும் பரான் பாலைவனத்தில் குடியேறினர். அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான். அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், ஆகார் இசுமவேலை ஒரு எகிப்தியப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தார். [6]

Remove ads

ஆய்வுகளின் அடிப்படையில்

இசுலாமிய புனித நூலான குர்ஆனில் ஆகாரின் பெயரோ அல்லது கதைகள் பற்றிய நேரடிக் குறிப்புகள் எதுவும் இல்லை என்றாலும் ஹதீஸ் தொகுப்புகள் மற்றும் அறிஞர்களின் புத்தகங்களில் பல முறை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல இசுலாமிய மற்றும் யூத ஆதாரங்கள் ஆகார் ஒரு இளவரசி என்று கூறுகின்றன. மிட்ராசின் பெரேஷித் ரப்பா மற்றும் சில இசுலாமிய இலக்கியங்களில் ஆகார் பண்டைய எகிப்தை ஆண்டு வந்த ஆட்சியாளர்களில் ஒருவரான பார்வோனின் மகள் என்று குறிப்பிடுகின்றன. [7] இன்னும் சில கருத்தானது ஆகார் சலே தீர்க்கதரிசி அவர்களின் வழித்தோன்றல்களில் வந்த மக்ரிபு அரசனின் மகள் என்று கூறியது. இசுமவேல் முஹம்மது நபி அவர்களின் மூதாதையராகக் கருதப்படுகிறார், ஆகார் ஓரிறைக் கொள்கையுடையவர் என்பதால் இசுலாத்தில் இவரைத் தாய்வழிமரபாக ஏற்றுக்கொள்கின்றது.[8]

Remove ads

குடும்ப மரம்

தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[9]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்


மேற்கோள்கள்

குறிப்புகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads