இசுட்ரோன்சியம் குரோமேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசுட்ரோன்சியம் குரோமேட்டு (Strontium chromate) என்பது SrCrO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்[1]
Remove ads
தயாரிப்பு முறை a
இசுட்ரோன்சியம் குளோரைடு மற்றும் சோடியம் குரோமேட்டு சேர்மங்கள் வினைபுரிவதால் இசுட்ரோன்சியம் குரோமேட்டு உருவாகிறது. அல்லது இசுட்ரோன்சியம் கார்பனேட்டு மற்றும் சோடியம் இருகுரோமேட்டு சேர்மங்கள் வினைபுரிவதாலும் இசுட்ரோன்சியம் குரோமேட்டு உருவாகிறது.
பயன்கள்
- நிறமிகளில் அரிமானம் தடுப்பியாகப் பயன்படுகிறது.
- மின்வேதியியல் செயல்முறைகளில் கரைசல்களில் சல்பேட்டுகளின் அடர்த்தியைக் கட்டுப்படுத்துகிறது.
- பாலிவினைல் குளோரைடு பிசின்களை நிறமூட்டப் பயன்படுகிறது.
- வானவெடிகள் தயாரிப்பில் பயனாகிறது.
- அலுமினியச் சீவல்களுக்கு மேல்பூச்சாகப் பயன்படுகிறது.
- விமானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் துத்தநாகம், மக்னீசியம், அலுமினியம் மற்றும் உலோகக் கலவைகள் ஆகியனவற்றுக்கு அரிமானத்தைத் தடுக்கும் முதன்மை இணைப்பான் பூச்சாகப் பூசப் பயன்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads