இந்தியக் கடற்படை கல்விக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியக் கடற்படை அகாதமி (Indian Naval Academy (INA or INA Ezhimala) இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையில் சேரும் அதிகாரிகளுக்கு அடிப்படை கப்பற்படைப் பயிற்சி அளிக்கிறது[3] இந்த அகாதமி, இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் அரபுக் கடல் கடற்கரையில் உள்ள எழிமலை எனுமிடத்தில் உள்ளது.

1969-இல் கடற்படை அகாதமி நிறுவப்பட்டாலும், இதன் எழிமலை வளாகம் 8 சனவரி 2000 அமைக்கப்பட்டு, இதன் பெயர் இந்தியக் கடற்படை அகாதமி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எழிமலையில் அமைந்த இந்தியக் கடற்படை அகாதமி வளாகம் 2,452 ஏக்கர் (9.92 km2) பரப்பளவு கொண்டது. இவ்வளாகத்தில் ஐஎன்எஸ் சமாரின் கிட்டங்கியும், ஐஎன்எச்எஸ் நவஜீவன் என்ற மருத்துவமனையும் உள்ளது.
Remove ads
பயிற்சி


மேனிலைப் பள்ளித் தேர்வில் அறிவியல் பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், UPSC அல்லது தேசிய பாதுகாப்பு அகாதமி நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முப்படைச் சேவைகளுக்கான தேர்வு வாரியத்தினர் நடத்தும் 5 நாள் உடல் தகுதி மற்றும் அறிவித் திறன் குறித்தான் சோதனையில் வெற்றி பெற்றவர்கள் கடற்படை அகாதமி நடத்தும் 4 ஆண்டு மின்னனு & தொலைத்தொடர்பு, இயந்திரவியல் மற்றும் கப்பல் கட்டுமானம் ஆகிய இளநிலை பொறியியல் பட்டப்படிப்புகளில் சேர்க்கை நடைபெறுகிறது.[4] 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் ஆறு மாத கடற்படை பயிற்சி வழங்கப்படும். மேலும் படிக்க விருப்பமுள்ளவர்கள் புது தில்லி இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் முதுநிலை படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்புகள் படிக்கலாம். இளநிலை கடற்படை அதிகாரிகளுக்கு கூடுதலாக தரைப்போர், நீர்மூழ்கி போர்முறைகள், கடற்படை விமானங்கள் இயக்குதல் குறித்து பயிற்சி வழங்கப்படும்.
Remove ads
வளாகம்

இந்தியக் காவற்படை அகாதமி, கேரளாவின் கண்ணூர் நகரத்திலிருந்து வடக்கே 35 கி.மீ. தொலைவிலும், மங்களுருக்கு தெற்கே 117 கி.மீ. தொலைவிலும், அரபுக் கடல் கடற்கரையில் எழிமலை எனுமிடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 8 கி.மீ. தொலைவில் உள்ள பையனூரில் உள்ளது. அருகமைந்த கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், எழிமலைக்கு தென்கிழக்கே 60 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் வளாகத்தில் ஒரு கலங்கரை விளக்கம் உள்ளது.
Remove ads
நிர்வாகம்
இந்த அகாதமி வளாகம் பயிற்சி மண்டலம், நிர்வாக மண்டலம் மற்றும் குடியிருப்பு மண்டலம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அகாதமியில் 2010-ஆம் ஆண்டில் கல்வி கற்பிக்க 161 கடற்படை அதிகாரிகளும், 47 பேரராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும், 502 கடற்படை மாலுமிகளும், 557 கடற்படை அதிகாரிகளின் குடும்பத்தினரும் இருந்தனர். இந்த அகாதமியின் வளாகத்தில் கடற்படை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 4,000 பேர் குடியிருப்பதற்கு வசதி உள்ளது. இந்த அகாதமி வளாகத்தில் ஐஎன்எஸ் நவஜீவனி என்ற மருத்துவ மனை 64 படுக்கைகளுடன் 12 டிசம்பர் 2012 அன்று நிறுவப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads