இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் (Second Vatican Council; Vatican II) என்பது இருபதாம் நூற்றாண்டுக் கத்தோலிக்க திருச்சபையில் நடந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வு ஆகும்[1]. இப்பொதுச்சங்கம் 1962ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் நாளிலிருந்து 1965ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாள்வரை நடந்தேறியது.
திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் (ஆட்சி:1958-1963) இச்சங்கத்தைக் கூட்டி அதன் முதல் அமர்வுக்குத் தலைமை தாங்கினார்[2]. அவரது இறப்புக்குப் பின் திருத்தந்தை ஆறாம் பவுல் (ஆட்சி:1963-1978) சங்கத்தைத் தொடர்ந்து நடத்தி, தலைமைதாங்கி, அதை நிறைவுக்குக் கொணர்ந்தார்[3].
கத்தோலிக்க திருச்சபையில் நடந்த பொதுச்சங்கங்களுள் இப்பொதுச்சங்கம் 21ஆவதாகக் கருதப்படுகிறது. இதற்கு முன் வத்திக்கான் நகரில் 1869-1870இல் நடந்த பொதுச்சங்கம் முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம் என்று அழைக்கப்படுகிறது.
Remove ads
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் பங்கேற்ற நால்வர் திருத்தந்தையர் ஆதல்
திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் கூட்டிய இச்சங்கத்தில் பங்கேற்ற நால்வர் பிற்காலத்தில் திருத்தந்தையராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது பெயர்கள் வருமாறு:
- ஆறாம் பவுல் (ஆட்சி: 1963-1978) - (முன்னாளில் கர்தினால் ஜோவான்னி பத்தீஸ்தா மொந்தீனி)
- முதலாம் யோவான் பவுல் (ஆட்சி: 1978) - (முன்னாளில் ஆயர் அல்பீனோ லூச்சியானி)
- இரண்டாம் யோவான் பவுல் (ஆட்சி: 1978-2004) - (முன்னாளில் ஆயர் கரோல் வொய்த்தீவா)
- பதினாறாம் பெனடிக்ட் (ஆட்சி: 2004-2013) - (முன்னாளில் இறையியல் ஆலோசராகப் பங்கேற்ற அருள்திரு யோசப் ராட்சிங்கர்)
Remove ads
திருச்சபை வாழ்வில் பொதுச்சங்கம்
திருச்சபைச் சொல் வழக்கில் சங்கம் என்பது ஆங்கிலத்தில் Council (இலத்தீன்: Concilium) என வரும். இது கிரேக்க மொழி மூலத்திலிருந்து Synod என்றும் வழங்கப்படும். இணைந்து வழிநடத்தல் என்னும் பொருளும், ஒன்றுகூட்டப்படுதல் என்னும் பொருளும் இவ்வாறு பெறப்படுகின்றன.
வரலாற்றில் நடந்த சங்கங்களைப் பார்க்கும்போது சங்கம் என்பது திருச்சபையின் ஆயர்கள் திருச்சபையின் வாழ்வு பற்றி கலந்துரையாடி முடிவுகள் எடுக்க ஒன்றுகூடுகிற கூட்டத்தைக் குறித்துவந்துள்ளது. பொது என்னும் அடைமொழி Ecumenical என்னும் கிரேக்க வழிச் சொல்லின் பெயர்ப்பாகும். Oikumene என்னும் கிரேக்கச் சொல் மனிதர்கள் குடியேறியுள்ள உலகம் என்னும் பொருளையும் உலகளாவிய என்னும் பொருளையும் தரும். இவ்வாறு பார்க்கும்போது பொதுச்சங்கம் என்பது உலகில் பரவியுள்ள திருச்சபையின் தலைவர்களாகிய ஆயர்கள் ஒன்றுகூடி, திருச்சபையின் நலனுக்கென முடிவுகள் எடுத்துச் செயல்பட முனைவதைக் குறிக்கும்.
Remove ads
வரலாற்றில் நிகழ்ந்த பொதுச்சங்கங்களின் பட்டியல்
கத்தோலிக்க திருச்சபையில் இதுவரை 21 பொதுச்சங்கங்கள் நிகழ்ந்ததாக வரலாற்றாசிரியர்கள் கணிக்கின்றனர். இறுதியாக நடைபெற்ற இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் கலந்துகொள்ள உலகம் எங்கும் பரவியிருக்கின்ற கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்கள் அனைவரும் வத்திக்கான் நகருக்கு அழைக்கப்பட்டனர். நோய், முதுவயது, அரசியல் தடை போன்ற காரணங்களால் சிலரால் பங்கேற்க முடியாமற் போயினும், 2600க்கும் மேலான ஆயர்கள் சங்கத்தில் கலந்துகொண்டனர்.
சங்கத்தைக் கூட்டப்போவதாக திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் 1959ஆம் ஆண்டு, சனவரி மாதம் 25ஆம் நாள் உரோமையில் அமைந்த புனித பவுல் பெருங்கோவிலில் ஆற்றிய உரையின்போது அறிவித்தார். அந்நாள் புனித பவுல் மனமாற்றம் அடைந்த நினைவுப் பெருவிழாவும், கிறித்தவர் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்காக மன்றாடுகின்ற நாளுமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டு உலகில் திருச்சபையின் வாழ்வும் பணியும் எவ்வாறு அமையவேண்டும் என்பதைக் குறித்து ஆய்ந்து, முடிவுகள் எடுத்து அவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்தோடு திருத்தந்தை பொதுச்சங்கம் கூடப்போவதாக அறிவித்தார். அவர் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டதும் கருதத்தக்கதாகும்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கத்தோலிகக திருச்சபையின் நீண்ட கால வரலாற்றில் மிகப் பெரியதாக அமைந்ததில் வியப்பில்லை. முதன்முறையாக, உலக நாடுகள் அனைத்திலுமிருந்து திருச்சபைத் தலைவர்கள் சங்கத்தில் பங்கேற்றனர். கத்தோலிக்க ஆயர்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை கொண்டிருந்தாலும் பார்வையாளர்களாக பிற கிறித்தவ சபைகளிலிருந்தும் சில தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான கிறித்தவ வரலாற்றில் நிகழ்ந்த பொதுச்சங்கங்களின் பெயர்களும், அவை நடைபெற்ற காலமும் இடமும் அவற்றில் விவாதிக்கப்பட்ட முக்கிய பொருள்களும் எடுக்கப்பட்ட சில முடிவுகளும் கீழே பட்டியலாகத் தரப்படுகின்றன.
Remove ads
காட்சியகம்
- இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் இரண்டாம் அமர்வு துவக்கம்
- இரண்டாம் வத்திக்கான் கவுன்சில் நிறைவு பெற்ற பின் புனித பேதுரு பேராலயத்திலிருந்து விடைபெறும் காட்சி
- இரண்டாம் வத்திக்கான் கவுன்சில் நிறைவு பெற்ற பின் ஆயர்கள் புனித பேதுரு பேராலயத்திலிருந்து வெளிவரும் காட்சி
- இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்
- முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆயர்கள் கலந்து ஆலோசனை செய்கிறார்கள்-இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்
- ஆயர்களின் ஒளிச்சிதறல் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads