இரத்தக்கழிசல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரத்தக்கழிசல் அல்லது சீதபேதி (dysentery அல்லது bloody flux) உடலின் குடல் பகுதியில், முக்கியமாக பெருங்குடலில், ஏற்படும் ஓர் அழற்சி நோயாகும். இதனால் காய்ச்சல் மற்றும் வயிற்று வலியுடன்[1] மலத்தில் சளி மற்றும்/அல்லது குருதியுடன் கூடிய கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும். இவை வயிற்றுப்பகுதிகளில் உள்ள பெருங்குடலில் சீரற்ற நிலையையும், பெரும் வேதனைகளையும் கொடுக்கக்கூடியது. இவை பரவுவதற்கு சுத்தமற்ற பழக்க வழக்கங்களே காரணமாகிறது.

விரைவான உண்மைகள் ஐ.சி.டி.-10, ஐ.சி.டி.-9 ...
Remove ads

அறிகுறிகள்

ஆரம்பத்தில் இவை வயிற்றுவலிகளையும், மலத்துடன் ரத்தம், கோழை கலந்து வெளியாகும். இதில் மலம் திரவ நிலையில் வெளியாகும். அடிக்கடி மலம் கழிக்க வேண்டியது வரும். பெரும்பாலும் இவை நம் நோய் எதிர்ப்பு ஆற்றலால் குணப்படுத்தவல்லது. இவை வெகுநாட்களுக்கு நீடிக்காது அதிகப்படியாக மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்காது. அவ்வாறு நீடிக்கும்போது நோய் முற்றுகிறது என்பதை உணர்த்துகிறது. இவை முற்றினால் உடல்நிலை மிக மோசமான நிலையையெட்டும். முதிர்ந்த நிலையில் குருதி கலந்த வாந்தி, கடும் வயிற்றுவலி, காய்ச்சல், அதிர்ந்த நிலையடைதல், மந்தம், சோர்வுகளை அடைய நேரிடும். நோயின் தீவிரம் மரணத்தையும் தழுவ நேரிடும். முலைப்பால் வெல்லம் தாளாமை தற்காலிகமாக நிகழலாம், சிலநேரங்களில் கடுமையான நோய்த்தாக்கத்தில் இது பல்லாண்டுகள் தொடரவும் கூடும். சில மிகக்கடுமையான தாக்கங்களில் குருதியுடன் வாந்தி எடுத்தல், கடுமையான வயிற்று வலி, காய்ச்சல், அதிர்ச்சி, மற்றும் சன்னி ஆகிய அறிகுறிகளும் காணப்படும்.[2][3][4][5]

Remove ads

காரணிகள்

பேதியானது வயிற்றில் ஏர்படும் வேறு சில அழர்சிகளால் கூட வரும். ஆனால் சீதபேதி இரு வேறு நோய் தொற்றுக்காரணிகளால் வருகிறது. ஒன்று - பாக்டீரியா இனத்தைச் சேர்ந்த சிகல்லா டிசண்ட்ரியே என்பதாகும். வேறு காரணி மூத்தவிலங்கில் ஒருவரான (எண்டமீபா இச்டோலிடிகா) அமீபாவாகும். இவைகளைக்கொண்டு பாசில்லரி டிசண்ட்ரி என்றும் அமீபிக் டிசண்ட்ரி எனவும் விவரிக்கிறோம்.

தொற்றுவீதம்

இவை பெரும்பாலும் முறையற்ற வாழ்வுநிலைகளால் வருவது. சுத்தமற்ற நீர் மற்றும் உணவுகளை எடுத்துக்கொள்வதாலும், நகங்களை நறுக்காததாலும்/நக இடுக்குகளை சுத்தமாக வைத்திராமையிலும் வருகிறது. சுத்தம் சோறுபோடும் என்பதை விட சுத்தம் ஆரோக்கியம் தரும். பொதுக்கழிவறைகளைப் பயன்படுத்துவதால், சுத்தமற்ற கழிவரைகளினாலும் வருகிறது.

அறியும் முறை

ஆய்வரைகளில் இவைகளை மாதிரியின் புறத்தோற்றத்தை வைத்து அறியலாம். மாதிரியாக மலம் அல்லது குருதியை பரிசோதனைக்கூடத்திற்குத் அனுப்பலாம். இவைகளை நுண்ணோக்கியின் மூலம் கண்டுபிடிக்க முடியும். மேலும் இவைகளை ஆய்வைகளில் வளரூடகத்தில் வளர்பதின் மூலமும் அறியலாம்.

தடுக்கும் முறை மற்றும் மருந்து

முன்பு சொன்னதைப் போல் சுத்தம் வாழ்வாதாரம். பாசில்லரி நோய்களுக்கு உயிர்ப்பகைகளைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சிப்ரோப்லாக்சாசின் என்னும் உயிர்ப்பகையை பயன்படுத்துகின்றனர். மூத்தவிலங்கிக்கு அசோல் மருந்துகளான மெட்ரோனிடசோலை பரிந்துரைக்கின்றனர். வருமுன் தடுப்பே சிறந்தது - குறைந்தது ஒரு வருடத்திற்கு ஒருமுறையாவது மருத்துவரையணுகி குடல்களை சுத்தம் செய்ய மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்புகள்

நோய் அறிகுறி தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். எக்காரணம் கொண்டும் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து எடுப்பதும் விற்பதும் குற்றமாகும்.

மேற்குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads